உளுந்து மருத்துவ பயன்கள்
உளுந்து தானிய வகைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்களை கொண்டது. காலை உணவில் அதிகளவு ஊட்டச்சத்து தேவைப்படுவதால் உளுந்தை வைத்து செய்யப்படும் இட்லி, வடை, தோசை போன்ற உணவுகள் சிறந்த ஊட்டச்சத்தை உடலுக்கு அளிக்கிறது.
தசைகள் தான் நம் உடலுக்கு வசீகரம், பொலிவு, தேஜஸ் போன்றவற்றை தருகிறது. பெண்கள் பருவம் அடையும் பொழுது உளுந்தும் முட்டையும் முக்கிய உணவாக கொடுக்கப்படுகிறது.
குடல் புண் குணமாக
1/2 கிலோ பச்சரிசி, 100 கிராம் உளுந்து, 1/2 தேக்கரண்டி சோம்பு, சிறிது மஞ்சள் சேர்த்து ஒன்றாக கொதிக்க வைத்து கஞ்சியாக காய்ச்சி சாப்பிட மிக விரைவில் குடல் புண் குணமாகும்.
வாய்ப்புண் குணமாக
மாங்கொட்டை பருப்பை ஊறவைத்து அதனுடன் சம அளவு உளுந்தை சேர்த்து அரைத்து தினமும் காலை மாலை இரு வேளை கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.
மூல நோய் குணமாக
ஒரு தேக்கரண்டி உளுந்து எடுத்து அதனுடன் ஒரு கைப்பிடி அளவு துத்தி இலை எடுத்து இரண்டையும் ஊறவைத்து அரைத்து காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.
மூட்டு வலி தீர
முருங்கை கீரை நான்கு கைப்பிடி அளவு, 5 பூண்டு பல், சிறிது மிளகு, சீரகம் எடுத்துக்கொண்டு அதனுடன் கருப்பு உளுந்து இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட்டு வர மூட்டுவலி காணாமல் போகும். தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
எலும்புகள் வலுப்பெற
இவற்றை அனைத்தையும் தனித்தனியாக வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு அடை செய்யும் பதத்தில் பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு சின்னவெங்காயம் சிறிதளவு, ஒரு பச்சை மிளகாய், 4 பூண்டு பல் இவற்றை நல்லெண்ணெய் விட்டு வதக்கி பிசைந்து வைத்துள்ள மாவுடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து அடையாக செய்து சாப்பிட்டு வர எலும்புகள் நன்கு வலுப்பெறும். தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர எலும்புகள் உறுதி பெற்று எலும்புகள் சம்பந்தமாக நோய்கள் தீரும்.
இளைத்த உடல் பருக்க
- கருப்பு உளுந்து – 100 கிராம்
- பாதாம் பருப்பு – 100 கிராம்
- பிஸ்தா பருப்பு – 100 கிராம்
- முந்திரி – 100 கிராம்
- கசகசா – 100 கிராம்
- அக்ரூட் பருப்பு – 100 கிராம்
- சுக்கு – 100 கிராம்
- ஏலக்காய் – 100 கிராம்
- மிளகு – 50 கிராம்
இவை அனைத்தையும் இளவறுப்பாக வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த தூளை தினமும் காலையில் சூடான பாலுடன் கலந்து சாப்பிட்டு வர இளைத்த உடல் பருக்கும்.
உளுந்து தைலம்
வாத நோய்களுக்கு சிறந்த மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இத்தைலம் அனைத்து சித்தா, ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கும். உடல் வலிகள் தீர இத்தைலத்தை மசாஜ் செய்து வர நல்ல பலன்கிடைக்கும்.