எள் மருத்துவ பயன்கள்
எள் பழங்காலம் முதல் பயன்படுத்தப்படும் ஒரு உணவு பொருளாக இருக்கிறது. இது உலகம் முழுவதும் உணவுக்கும், மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இளைத்தவனுக்கு எள் என்ற பழமொழிக்கு ஏற்ப அதிகளவு ஊட்டச்சத்துக்கள் அடக்கியுள்ளது. குறிப்பாக வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைத்து காணப்படுகிறது. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.
மூளையின் செயற்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. நரம்பு வியாதிகளை குணமாக்குகிறது. இதய செயல்பாட்டை சீராக இருக்க உதவுகிறது. இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
நல்லெண்ணெய்
எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் ஆகும். மற்ற எண்ணெய் வகைகளை விட நல்லெண்ணெய் அதிக நன்மைகளை தரக்கூடியது சித்த மருத்துவத்தில் அதிகமாக தைலங்கள் தயாரிக்க நல்லெண்ணெயே பயன்படுத்தப்படுகிறது.
உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களுக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். நல்லெண்ணையை கண்களில் விட்டு குளித்து வர கண் வலி, கண்கூச்சம், கண்களில் நீர் வடிதல் ஆகியவை குணமாகும்.
அதிக புரதம் உள்ள உணவு
எள்ளில் 20% மேல் அனிமோ அமிலங்கள் அடங்கியுள்ளது. அதிக புரதசத்து உள்ள நூடுல்ஸ், சாலட், ஸ்வீட் போன்றவற்றில் தூவி சாப்பிடலாம்.
சர்க்கரை நோயை தடுக்கிறது
இதில் மெக்னீசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் சர்க்கரை நோயை எதிர்த்து போராட உதவுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்க நல்லெண்ணையை பயன்படுத்தலாம்.
எலும்புகள் ஆரோக்கியத்திற்கு
இதில் உள்ள துத்தநாக சத்து மற்றும் ஜிங்க் ஆகியவை எலும்பில் உள்ள தாதுக்களின் அளவை அதிகரிப்பதோடு எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எள் விதைகளில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுவதால் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் இதை உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கிறது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு
எளிதில் ஜீரணமாகும் புரதம் எள்ளில் நிறைந்துள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலம் உள்ளது. 100 கிராம் எள்ளில் 18 கிராம் புரதம் உள்ளது.
மூல நோய் குணமாக
எள்ளை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட மூல நோய் குணமாகும். எள்ளை பொடியை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.
உடல் பலம் அதிகரிக்க
உடல் சோர்வாக காணப்பட்டால் எள்ளை பொடியாக்கி சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கி உடல் பலம் அதிகரிக்கும்.
அல்லது எள் பொடியுடன் கறிவேப்பிலை பொடி சேர்த்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட உடல் உறுதி பெறும்.
எள் விதைகளை எப்படி பயன்படுத்தலாம்?
- பெரும்பாலும் எள் விதைகளை பலகாரங்களில் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. எள்ளை கொண்டு மிட்டாய், கொழுக்கட்டை தயாரித்து சாப்பிடலாம்.
- இட்லி, தோசை போன்ற காலை உணவுகளுக்கு எள்ளை பொடி செய்து பயன்படுத்தலாம். இதை நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம். எள்ளை அடை செய்து மாலை நேரங்களில் சாப்பிடலாம் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
எள் தீமைகள்
- அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது சில தீமைகள் ஏற்படும். சிலருக்கு எள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும். வாந்தி, குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம்.
- கருவுற்ற பெண்கள் எள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.