மூலிகைகள்

சுக்கு மருத்துவ பயன்கள்

சுக்கு என்பது இஞ்சியை உலரவைத்து பயன்படுத்துவது சுக்கு ஆகும். வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல், அசீரண கோளாறு போன்றவற்றுக்கு சிறந்ததாகும். சித்த மருத்துவத்தில் முக்கிய சூரணமாக இருக்கும் திரிகடுகு சூரணத்தில் சேர்க்கப்படும் 3ல் சுக்குவும் ஒன்றாகும்.

வயிற்றுக்கோளாறு வராமல் இருக்க

ஒரு டீஸ்பூன் சுக்குப் பொடியுடன் சிறிது நெய்யை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட வயிற்றுக்கோளாறுகள் வராமல் இருக்கும்.

வாயு பிடிப்பு நீங்க

தூக்கமின்மை, அதிக உடல் உழைப்பினால் ஏற்படும் வாயு பிடிப்பு ஏற்படும் அதற்கு 1/2 ஸ்பூன் சுக்கு பொடியுடன் 1/2 சர்க்கரை சேர்த்து வெந்நீரில் கலக்கி வெதுவெதுப்பாக குடிக்க உடனடியாக வாயு பிடிப்பு நீங்கும்.

மார்பு எரிச்சல், அஜீரண கோளாறு நீங்க

5 கிராம் அளவு சுக்கு பொடியை ஒரு டம்ளர் வெந்நீரில் போட்டு 15 நிமிடங்கள் அப்படியே மூடி வைத்து விட்டு பிறகு தேன் கலந்து குடிக்க வேண்டும்.

இது போன்று தினமும் காலை, மாலை என 21 நாட்களுக்கு குடித்து வர மார்பு எரிச்சல், அஜீரண கோளாறு நீங்கும். மேலும் வயிற்று வலி, வயிற்றுப்பொருமல், புளித்த ஏப்பம், மூக்கடைப்பு, சுவையின்மை ஆகியவை தீரும்.

செரியாமை, வயிற்றுப்பொருமல் குணமாக

சுக்கு, கிராம்பு, சீரகம், ஏலரிசி இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி இரண்டு கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வயிற்றுப்பொருமல், செரியாமை, வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.

தலைவலி குணமாக

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் சுக்கை பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி உடனே குணமாகும். வலி நீங்கியதும் நன்றாக ஒரு கழுவி விட வேண்டும்.

முதுகுவலி குணமாக

சுக்கு, அதிமதுரம், மிளகு இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து காலை சாப்பாட்டிற்கு பிறகு குடித்து வர முதுகு வலி குணமாகும்.

பல் பிரச்சினைகள் தீர

சுக்குப்பொடியுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வர பல் வலி குணமாகும். வாய் துர்நாற்றம் விலகும். ஈறுகளில் இரத்தம் கசிதல் குணமாகும்.

விஷக்கடிக்கு

சுக்கு , மிளகு ஐந்து , வெற்றிலை ஒன்று இவற்றை இடித்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி, பூரான் கடி விஷம் முறியும்.

சுக்குடன் வசம்பு சேர்த்து பொடியாக்கி வெந்நீரில் கலந்து சாப்பிட அரணை விஷம் இறங்கும்.

மலக்குடல் கிருமிகள் அழிய

சுக்குவை சிறிது சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து சாப்பிட மலக்குடலில் உள்ள தீமை கிருமிகள் அழியும். சுக்குடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்து சூடேற்றி பருக மூல நோய் குணமாகும்.

தொண்டை கட்டு குணமாக

சுக்குடன், சிறிது சுண்ணாம்பு, சிறுது மிளகு சேர்த்து மைபோல் அரைத்து தொண்டையில் பூசி வர தொண்டைக்கட்டு மாறும்.

சளி தொல்லை தீர

சுக்கு, மிளகு, மல்லி, திப்பிலி, சித்தரத்தை இவற்றை சமஅளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து நன்றாக கொதித்தபின் இறக்கி வடிகட்டி லேசான சூட்டுடன் பருகி வர நீண்ட நாள் சளி தொல்லை நீங்கும்.

சுக்கு காபி

தண்ணீரை கொதிக்க வைத்து சுக்குடன் மிளகு, கருப்பட்டி சேர்த்து காய்ச்சி குடிக்க உடல் சோர்வு நீங்கும். மேலும் தொண்டை கரகரப்பு, வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி ஆகியவை தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + seventeen =

error: Content is protected !!