கொய்யா மருத்துவ பயன்கள்
கொய்யா பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பதுண்டு ஏனென்றால் சத்துக்கள் அதிகம் அனைத்து இடங்களிலும் விளையக்கூடியது. கொய்யா பழம், இலை, வேர், பட்டை என அனைத்தும் மருத்துவ பயனுடையது.
கொய்யாவில் அதிக வைட்டமின் சி உள்ளது. இது பல் ஆரோக்கியத்திற்கும், எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடலாம்.
வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்து காணப்படுகிறது. செரிமானத்திற்கும், வயிற்று கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றை குணமாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.கண் நோய்கள் வராமல் தடுக்கிறது.
கொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள்
ஒரு கொய்யாப்பழத்தில் கார்போஹட்ரேட், விட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து, புரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது
இரத்தம் சுத்தமாக
கொய்யாப்பழத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட உடல் சோர்வு, பித்தம் நீங்கும். இரத்தம் சுத்தமாகும்.
அசீரணம்
மதிய உணவுக்கு பின் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் நன்றாக செரிமானம் ஆகும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். வயிற்றுப்புண் குணமாகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொய்யா சிறந்த உணவு. இதில் நார்ச்சத்து இருப்பதாலும் குறைந்த அளவு சர்க்கரை இருப்பதாலும் இதை தாராளமாக சாப்பிடலாம்.
மன அழுத்தம்
கொய்யாப்பழத்தில் மெக்னீசியம் அதிகம் நிறைந்துள்ளது. இது நரம்புகளுக்கும் தசைகளுக்கு ஓய்வை அளிக்கும் ஆற்றலை கொண்டது. மேலும் மூளையின் செயல்பாட்டுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைந்து மனதுக்கு அமைதியை தருகிறது.
முகம் பொலிவு பெற
கொய்யாப்பழம் அடிக்கடி சாப்பிட்ட வர முகம் பொலிவடையும். தோல் வறட்சியை நீக்கும்.சருமத்திற்கு நல்ல பளபளப்பை தரும்.
கொய்யா இலை நன்மைகள்
- கொய்யா இலையுடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போட கடுமையான தலைவலி குணமாகும்.
- 5 கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க வயிற்றுப்புண், தொண்டைப்புண் ஆகியவை குணமாகும்.
- இளம் கொய்யா இலைகளை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டான் செரியாமை, வாயு, வயிற்றுப்பொருமல் ஆகியவை குணமாகும்.
- கொய்யாஇலை அல்லது பிஞ்சு கொய்யாவை மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உடனே குணமாகும்.
- 10 கொய்யா இலைகளை 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு அதனுடன் ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து கொதிக்க வைத்து 200 மிலியாக காய்ச்சி ஒரு வேளைக்கு ஒரு டம்ளர் வீதம் குடித்து வர வாந்தி, வாய்ப்பொருல், அதிக தாகம் குணமாகும்.
கொய்யா வேர் பயன்கள்
- இதன் வேரை சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து அதிகாலையில் வடிகட்டி அருந்தி வர வயிறு சம்பந்தமாக கோளாறுகள் நீங்கும். குழந்தைகளுக்கு 30மிலி அளவு கொடுக்க பேதி குணமாகும்.
- வெளி மூலத்தால் அவதிப்படுபவர்கள் கொய்யாவேரை தண்ணீரில் ஊறவைத்து அதில் வெளி மூலத்தை கழுவி வர விரைவில் குணமாகும்.
கொய்யாப்பழம் எப்போது சாப்பிட வேண்டும்
கொய்யாப்பழத்தை தினமும் காலை, மதியம் உணவுக்கு முன் அல்லது உணவுக்கு பின் சாப்பிடலாம். அல்லது காலை, மாலை உடற்பயிற்சிக்கு முன் பின் சாப்பிடலாம். இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது குளிர்ச்சியை தருவதால் சளி, இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.