சதகுப்பை பயன்கள்
சதகுப்பை விதைகள் சீரகம், சோம்பு பயன்படுத்துவது போல் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது கீரை வகையை சேர்ந்தது. சோக்கிக்கீரை என்று கூறுவதுண்டு.
இதன் முக்கிய மருத்துவ பயன் வாத பிரச்சினைகளுக்கும், தலைவலி மற்றும் ஆசன வாய் கடுப்பு போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக கருப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை தருகிறது.
கருப்பை பிரச்சினைகளுக்கு
சதகுப்பை, கருஞ்சிரகம் மற்றும் மரமஞ்சள் இன்றில் ஒவ்வொன்றிலும் 25 கிராம் அளவு எடுத்து பொடியாக்கி 100 கிராம் பனைவெல்லம் சேர்த்து கலந்து தினமும் 5 கிராம் அளவு காலை, மாலை என இருவேளை சாப்பிட்ட பிறகு 5 நிமிடம் களைத்து சோம்பு குடிநீர் குடிக்க வேண்டும்.
இது போன்று தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை நல்ல பலமடையும். கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும். கருப்பை பிரச்சினைகளால் கர்ப்பம் தரிக்க முடியாதவர்களுக்கும் கர்ப்பம் தரிக்க செய்யும்.
நுரையீரல் சுத்தமாக
இதன் சூரணத்தை 1 கிராம் அளவு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து சாப்பிட்டு வர நுரையீரல் மற்றும் இரைப்பையில் உள்ள மாசுக்களை நீக்கி சுத்தமாக்கும். வாத நோய்கள் மற்றும் பிசியின்மை தீரும்.
இரத்த சோகை
சதகுப்பை பொடியை 5 கிராம் அளவு எடுத்து கொத்தமல்லி சாறுடன் கலந்து சாப்பிட்டு வர இரத்த சோகை குணமாகும்.
வீக்கங்களுக்கு
சதகுப்பை இலையில் சிறிது விளக்கெண்ணெய் சிறிது விட்டு வதக்கி வீக்கங்களுக்கு கட்ட வீக்கங்கள் குறையும்.