பொடுதலை மூலிகை பயன்கள்
பொடுதலை மூலிகை தமிழகம் முழுவது ஆறு, குளம் போன்ற இடங்களில் அதிகளவு வளர்ந்து காணப்படும். வெண்மை நிற பூக்களை உடைய செடி இனம்.
இருமல், பேதி, வாதநோய் இவைகளுக்கு சிறந்த மூலிகையாகும். உடலுக்கு பொலிவை தரக்கூடியது.
அசீரண கோளாறு நீங்க
ஒரு லிட்டர் தண்ணீரில் பொடுதலை இலை ஒரு கைப்பிடி அளவு போட்டு 4-ல் ஒரு பங்காக காய்ச்சி 2 தேக்கரண்டி அளவு சாப்பிட பேதி, அசீரண கோளாறுகள் நீங்கும்.
பொடுகு, தோல் நோய்கள் நீங்க
பொடுதலை இலையின் சாற்றை பிழிந்து நல்லெண்ணையில் கலந்து நன்றாக காய்ச்சி எடுத்து வாரம் இருமுறை தலையில் நன்றாக தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்து குளித்து வர பொடுகு நீங்கும். உடலில் தேய்த்து குளித்து வர தோல்நோய்கள் தீரும்.
பொடுதலை துவையல்
புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி இதனுடன் பொடுதலை இலையை சேர்த்து துவையளாக அரைத்து சாப்பிட்டு வர மார்புச்சளி, இருமல் நீங்கும்.
மூலம், பவுத்திரம் குணமாக
பொடுதலை இலையை நெய் விட்டு வதக்கி அதில் உளுந்து சேர்த்து அரைத்து துவையலாக்கி சாப்பிட்டு வர மூல நோய்கள் அனைத்தும் தீரும். பவுத்திரம் குணமாகும்.
வெள்ளைப்படுதல் குணமாக
இதன் இலையை சீரகம் சேர்த்து அரைத்து சுண்டக்காய் அளவு எடுத்து வெண்ணை சேர்த்து சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.