மூலிகைகள்

இஞ்சி மருத்துவ பயன்கள்

இஞ்சி மஞ்சள் இனத்தை சார்ந்தது, நல்ல மணமுடைய, காரத்தன்மை உடையது . இஞ்சியை காயவைத்து பயன்படுத்துவது தான் சுக்கு. இஞ்சியும் சுக்கும் அன்றாடம் நாம் பயன்படுத்துவதாகும். சித்த மருத்துவத்தில் லேகியங்களிலும், குடிநீர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

குணம்

பசியை தூண்டும், செரிமான கோளாறை நீக்கும், பித்தம் நீக்கும், மயக்கம், தலை சுற்றல் போக்கும், உடல் வலி, சளி, இருமல் போக்கும்.

பித்தம், தலை சுற்றல் குணமாக

இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் போட்டு ஊறவைத்து தினமும் ஓரிரு துண்டுகள் சாப்பிட்டுவர ( 48 நாட்கள் ) பித்தம், தலைசுற்றல், உணவு செரியாமை நீங்கும். மேலும் உடல் உறுதி பெறும். ஆயுள் அதிகரிக்கும். முகம் பொலிவு பெறும்.

தோல் நோய்கள் குணமாக

இஞ்சியை இடித்து வெயிலில் லேசாக காயவைத்து பிறகு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு லேசாக சூட்டுடன் குளித்து வர உடலில் உள்ள கொப்பளங்களை நீக்குமம். உள்ளங்கால், கைகளில் சிலருக்கு தோல் உரியும் இதற்கு இஞ்சியை சாறு எடுத்து சிறிது வெல்லம் சேர்த்து குடித்து வர விரைவில் குணமடையும்.

செரியாமை, வயிற்று கோளாறு நீங்க

சீரகம், கருவேப்பிலை, இஞ்சி இவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட்ட வயிற்றுக்கோளாறு, செரியாமை நீங்கும்.

வாந்தி, மயக்கம், குமட்டல்

இஞ்சி சாறு 30மி.லி, எலுமிச்சை சாறு 30மி.லி , தேன் 15மி.லி கலந்து அதில் 15மிலி அளவு சாப்பிட வாந்தி, மயக்கம், குமட்டல் தீரும்.

சுவாச பிரச்சனைகள்

இஞ்சியில் ஆண்டி ஹிஸ்டமைன் என்ற பண்புகள் அதிகம் உள்ளதால் நம் உடலில் காற்றுப்பாதையில் உள்ள சுருக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் சுவாச பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுகிறது. சளி மற்றும் தொடைபுண் போன்றவற்றில் இருந்து விரைந்து நிவாரணம் பெறலாம்.

புற்று நோய் வராமல் தடுக்க

இன்றைய சூழலில் புற்று நோய்களில் தாக்கம் ஏராளம். இஞ்சியில் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை இருப்பதால் புற்றுநோய்கள் வருவதை தடுக்கிறது. புரோஸ்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.

பெருங்குடல் வீக்கம், புற்றுநோய் கட்டிகள் மீது செயல்பட்டு அதன் பாதிப்பை குறைத்து நல்ல பலனைத்தருவதாக ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது.

வாயுதொல்லை நீங்க

இஞ்சியை இடித்து மோரில் கலந்து அதில் துளசி சாறு சிறிதளவு சேர்த்து ஒரு ஸ்பூன் வீதம் தினமும் ஒரு வாரம் சாப்பிட்டுவர வாய்வுத்தொல்லை நீங்கும்.

மாதவிடாய்

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலியை குறைக்க இஞ்சி உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது . ஈரானில் நடத்தப்பட்ட ஆய்வில் மாதவிடாய் வலிக்கான அறிகுறிகள் குறைந்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் முறையற்ற மாதவிடாய் சுழற்சிக்கு இஞ்சி சாறு ஒரு ஸ்பூன், சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வரலாம்.

சருமம் மென்மையாக

தோல்நீக்கிய இஞ்சி சிறிய துண்டு, 2 டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவி வர சருமத்தை மென்மையாக்கும், என்றும் இளமையாக தோற்றத்தை தரும்.

சுக்கு

திரிகடுகு சூரணத்தில் சேர்க்கப்படுகிறது. திரிகடுகு சூரணம் 2 கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்ட சளி, செரியாமை, ஆஸ்துமா ஆகியவற்றை நீக்கும்.

உணவுகளில் இஞ்சி

தேங்காய் சட்னியில் சேர்க்கப்படுகிறது. மேலும் குருமா, துவையல், டீ, ஆகியவற்றில் இஞ்சி சேர்க்கப்படுகிறது. இஞ்சி ஊறுகாயும் சிறந்ததாகும். சுக்கு ரசத்திலும் சேர்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 4 =

error: Content is protected !!