சோளம் பயன்கள்
சோளம் அல்லது மக்காச்சோளம் என்று அழைக்கப்படும் தானியமாகும். உலகம் முழுவதுமே பயிரிடப்பம் பயிர்.உடலுக்கு நல்ல உறுதியை தரக்கூடிய முக்கிய உணவாகும்.சோளத்தின் வகைகள் 30க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
இதன் முக்கிய குணம் பசியை அடக்கும், உடலுக்கு உறுதியை தரும். நம் முன்னோர்கள் கூழாக செய்து சாப்பிட்டு வந்தார்கள் அதனால் அவர்களின் உடல் நல்ல உறுதியுடன் இருந்தது.
சோளத்தில் உள்ள சத்துக்கள்
இதில் இரும்பு, புரதம், கால்சியம், கொழுப்பு மற்றும் நார் சத்துக்கள் உள்ளன. இதில் குளுக்கோஸ் குறைந்தளவு உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வர கட்டுக்குள் இருக்கும்.
உடல் உறுதி
அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக சோளத்தை சாப்பிட வேண்டும். இது செரிமானத்தை தாமதமாக செய்வதால் உடளுக்கு தேவையான ஆற்றலை நாள் முழுவதும் தருகிறது.
உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கு சோளமாவில் செய்த உணவுகளை கொடுத்து வர பலவீனம் நீங்கி உடல் நல்ல பலம் பெறும்.
கொட்ட கொழுப்புகளை நீக்குகிறது
உடலில் கொட்டக்கொழுப்பை நீக்குவதில் முதன்மை வகிக்கிறது. மேலும் மூளை வளர்ச்சியையும், நரம்பு மண்டலங்களையும் நன்றாக செயல்பட வைக்கிறது,
கண் பார்வை அதிகரிக்க
சோளத்தை சாப்பிட்டு வர கண் பார்வை திறன் அதிகரிக்கும். எலும்புகளையும் வலுவாக இருக்க வைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு சத்து மாவு
மக்காசோள மாவுடன் வெல்லம் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்துவர மூளை செயல் திறன் அதிகரிக்கும், உடல் நல்ல பலம் பெறும் .
உடல் எடை அதிகரிக்க
சோளத்தில் அதிக கலோரிகள் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்கிறது. ஆரோக்கியமாக உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.
மலச்சிக்கல் குணமாக
இதில் நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமான மண்டலத்தை சீராக இயக்குகிறது. இதனால் மலச்சிக்கல் மற்றும் மூல நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைகிறது.
சர்க்கரை நோய்
சோளம் இரத்த சர்க்கரை அளவை குறைகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவகால சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.
இதில் புரதம், நார்சத்து, கால்சியம் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட சிறந்ததாகும். இது சர்க்கரை நோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.