தேங்காய் பால் நன்மைகள்
தேங்காய் பால் பல மருத்துவ நன்மைகளை கொண்டது. தேங்காய் பாலை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.அல்லது சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம். பாலுக்கு இணையான சத்துக்கள் நிறைந்தது.
மாரடைப்பை தடுக்கிறது
இதயத்தின் இரத்த ஓட்டத்தை சீராக இயங்க வைப்பதால், மாரடைப்பை தடுக்கிறது.
வயிற்றுப்புண்
வயிற்றில் உள்ள புண்களை குணமாக்குகிறது. தேங்காய் பாலில் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.
விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது
தேங்காய் பாலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தமாக்குகிறது, விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும்.
கூந்தல் பளபளப்பாக
தேங்காய் பாளுடன் சிறிது தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வர தலையில் உள்ள அழுக்குகள் நீங்கும், கூந்தல் பளபளப்பாகும்.
உடல் புத்துணர்ச்சி பெற
அதிக உடல் உழைப்பினால் உடல் சோர்வடையும் பொழுது தேங்காய்ப்பாலுடன் சிறுது தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
தோல் சுருக்கம் நீங்க
வாரம் இருமுறையாவது தேங்காய் பாலை சாப்பிட்டு வர தோல்களில் சுருக்கங்கள் ஏற்படுவதை தள்ளிப்போட்டு இளமை தோற்றத்தை அளிக்கும்.
தேங்காய் பால் கஞ்சி
தேங்காய் பாலுடன் வெந்தயம் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி சாப்பிட உடல் வலி நீங்கும். வாய்ப்புண், வாய் நாற்றம் நீங்கும். மூலம் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்.