கூந்தலுக்கு பளபளப்பை தரும் தயிர்
நம் உடலுக்கு தயிர் எவ்வளவு நன்மைகளை தருகிறதோ அதே அளவுக்கு நம் கூந்தலுக்கும் பல நன்மைகளை தருகிறது. மென்மையான, பளபளப்பான கூந்தலை பெற தயிரை பயன்படுத்தலாம். தயிர் கூந்தலுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடியது.
கூந்தல் பளபளப்பாக
இன்றைய சூழலில் சுற்று சூழல் அதிக மாசு ஏற்படுகிறது நம் வெளியே சென்று வருவதனால் நம் கூந்தலும் பாதிப்படைகிறது. இதற்கு செம்பருத்தி இதழ்கள் 10 எடுத்து அதனுடன் 10 வேப்பிலை சேர்த்து அரைத்து ஒரு கப் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து நன்றாக குழைத்து தலைமுடி வேர்கள் வரை நன்றாக படும்படி மஜாஜ் செய்து 30 நிமிடம் கழித்து கூந்தலை அலசி வந்தால் கூந்தல் பளபளப்பாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு
ஒரு கப் தயிருடன் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் அதனுடன் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்து சிறிது கறிவேப்பிலை சேர்த்து அரைத்து முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்றாக கலக்கி மயிர்கால்கள் படும்படி தேய்த்து குளித்து வர முடி உதிர்வது குறைந்து முடி நல்ல அடர்த்தியாக வளரும்.
பொடுகு தொல்லை தீர
ஒரு கப் தயிர், வெந்தயத்தூள் 5 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் சேர்த்து குழைத்து தலையில் நன்றாக மஜாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய் அல்லது லேசான ஷாம்பூ போட்டு அலச வேண்டும்.வாரம் இருமுறை செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
கூந்தல் வறட்சி
தலையில் வறட்சி ஏற்படும் போது மயிர்கால்களும் வறண்டு போய்விடுகிறது. இது கூந்தலின் வளர்ச்சியாக பாதிக்கும் இதற்கு ஒரு கப் தயிரை நன்றாக தலையில் மயிர்கால்கள் பகுதியில் நன்றாக படும்படி தேய்ப்பதினால் தலைக்கு ஈரப்பதத்தை அளிக்கும். இது முடி பிளவு, முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
கூந்தலை வலிமையாக்க
தயிருடன் துளசி சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக மசித்து தலைக்கு பேக் போட்டு 30 நிமிடம் கழித்து லேசான ஷாம்பு போட்டு அலசி வரவும். இது கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து கூந்தலை வலிமையாக்குகிறது.