கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் செம்பருத்தி எண்ணெய் தயாரிக்கும் முறை

செம்பருத்தி எண்ணெய் தலைமுடி வளர்ச்சி, பொடுகு, அடர்த்தியான முடி என அனைத்திற்கும் இயற்கையாக தீர்வு தரும் ஒரு மூலிகை எண்ணெயாகும்.
கடைகளில் இப்பொழுது செம்பருத்தியில் தயாரிக்கப்பட்ட பல எண்ணெய்கள் வருகின்றன அவையெல்லாம் இரசாயனங்களால் தயாரிக்கப்பட்டது ஆகும் இதனால் நமக்கு சில நாட்களிலேயே பக்க விளைவுகளை ஏற்படும்.
எனவே இயற்கையாகவே செம்பருத்தி கூந்தல் எண்ணையை செய்து பயன்படுத்தி வந்தால் பக்கவிளைவுகள் இன்றி ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
செம்பருத்தி எண்ணெய் தயாரிக்கும் முறை
செம்பருத்தி இலை மற்றும் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும் பிறகு 1/2 லிட்டர் தேங்காய் எண்ணையை சூடேற்றி அதில் அரைத்து வைத்த செம்பருத்தியை போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும் பிறகு அதில் சிறிது கறிவேப்பிலையை போட்டு காய்ச்ச வேண்டும்.நன்றாக கொதித்து எண்ணையுடன் கலந்தவுடன் இறக்கி வைத்து ஆறியதும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
குளிப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் தலையில் ஊற்றி நன்றாக மசாஜ் செய்து பிறகு சிகைக்காய் போட்டு குளிக்கவும். இதை வழக்கமாக தேய்க்கும் எண்ணையாகவும் பயன்படுத்தலாம்.
பயன்கள்
- முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
- கூந்தலுக்கு பளபளப்பை தரும்.
- அடர்த்தி அதிகரிக்கும்.
- பொடுகு நீங்கும்.
- நரை முடி மாறும்.