மூலிகைகள்
ஆயுளை நீட்டிக்கும் சிவனார் வேம்பு மூலிகை
சிவனார் வேம்பு சிவப்பு நிறப்பூக்களை உடையது. செம்மண் பகுதிகளில் நன்றாக செழித்து வளரக்கூடியது. தமிழகமெங்கும் வளரக்கூடியது. இதன் பூ, காய், தண்டு, வேர் என செடிமுழுவதும் மருத்துவ பயனுடையது.
இதனை அன்றெரித்தான் பூண்டு என அழைப்பதும் உண்டு.வீக்கம் கட்டிகளுக்கு சிறந்த மூலிகை, நஞ்சு முறிப்பது முக்கிய குணமாகும்.
சிவனார் வேம்பு மருத்துவ பயன்கள்
- இதன் வேரை நன்றாக உலர்த்தி தூளாக்கி அதனுடன் கற்கண்டு தூள் சிறிது சேர்த்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆயுளை நீட்டிக்க செய்யும். மேலும் தொழு நோய் மற்றும் கடுமையான நோய்களையும் குணப்படுத்தும்.
- இதன் வேரை எடுத்து பல் துலக்கி வர பல் வலி குணமாகும். இதன் வேரை காயவைத்து பொடியாக்கி தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.
- இலையை அரைத்து கட்டிகளுக்கு வைத்து கட்ட குணமாகும்.
- சிவனார் வேம்புச்செடியை எரித்து சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து சொறி, சிரங்குக்கு தடவி வர விரைவில் குணமாகும்.