சர்க்கரை நோய் வராமல் இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!!
சர்க்கரை நோய் வராமல் இருக்க சில உணவுப் பழக்கங்களையும் உடற்பயிற்சியும் பழக்கப்படுத்திக்கொண்டால் சர்க்கரை நோயை தடுக்க முடியும். சர்க்கரை நோய்தான் இன்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதற்கு நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் உடல் உழைப்பு இல்லாததும், அதிக மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
சில உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றியும் சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்கவும், சர்க்கரை நோய் வராமல் இருக்க சில வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
திரிபலா சூரணம்
நம் முன்னோர்கள் அறுசுவை உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்பொழுது இனிப்பு மற்றும் காரவகை உணவுகளையே அதிகளவு சாப்பிட்டு வருகிறோம். அறுசுவையும் சரியான விகிதத்தில் சாப்பிட்டாலே நோய்களை வராமல் தடுக்கலாம்.
திரிபலாவில் நெல்லிக்காய், தான்றிக்காய் மற்றும் கடுக்காய் இருப்பதால் இது நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கிறது.
வாழைப்பூ
வாழைப்பூவை கசாயமாக செய்து சாப்பிடலாம் அல்லது பருப்புடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது வடை செய்து சாப்பிட்டு வரலாம். இது சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்.
தென்னைம்பாளை
தென்னனை மர பூவை பறித்து நன்றாக காயவைத்து இடித்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை 2 கிராம் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்பு மண்டலங்களும், கண் பார்வையும் அதிகளவு பாதிக்கப்படும், இதனை சரியாக்கும் தன்மை தென்னம்பாளைக்கு உள்ளது.
கருஞ்சீரகம்
கருஞ்சீரகத்தை பொடியாக்கி தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர சர்க்கரை நோயை வராமல் தடுக்கலாம். ஏற்கனவே இருந்தால் கட்டுக்குள் வைக்கும்.
பாகற்காய்
பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. வாரம் ஒரு முறை இதனை சாப்பிட்டுவர நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் சுரக்க இது உதவுகிறது.
வெந்தயம்
தினமும் குறைந்தது 25 கிராம் அளவாவது வெந்தயத்தை உணவில் சேர்க்க வேண்டும் அது சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது.
உடற்பயிற்சி
உணவு வகைகளுடன் உடற்பயிற்சியும் தினசரி மேற்கொள்வது சிறந்தது குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.