மூலிகைகள்

பாகற்காய் மருத்துவ பயன்கள்

பாகற்காய் கசப்பு தன்மை உடையது. கொடி வகையை சேர்ந்தது. எல்லா நாட்களிலும் கிடைக்கக்கூடியது. வீட்டு தோட்டம், மாடி தோட்டம் என அனைத்து இடங்களிலும் காய்க்ககூடியது.

இது கசப்பு தன்மை உள்ளதால் பெரும்பாலும் அதிகமாக யாரும் விரும்பி உண்பதில்லை, ஆனால் இதில் அதிகமாக மருத்துவ குணங்கள் உள்ளது .

பாகற்காயில் வைட்டமின்களும், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் உடலுக்கு அதிக பலனை தருகிறது.

1. சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய்

பாகற்காயில் சாரண்டின் என்ற வேதிப்பொருள் உள்ளதால் இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை குறைகிறது. மேலும் பாலிபெப்டைடு என்ற இன்சுலின் இருப்பதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவுகிறது.

2. அதிக வலிமை தரக்கூடியது

கால்சியம் சத்து பசலை கீரையில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் பல் எலும்புகளுக்கு வலிமையை தரும். இதில் உள்ள பொட்டாசியச்சத்து நரம்பு மண்டலங்களுக்கும், தசைகளின் வலிமைக்கும் உதவுகிறது.

3. புற்றுநோய் அணுக்களை அழிக்கிறது

இது வியாதிகளை உருவாக்கும் கிருமிகளை தாக்கி அழிக்கிறது . நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கிறது.

4. மலச்சிக்கல்

இது ஜீரண சக்தியை அதிகரிப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது.

5. இரத்தசோகை

இதன் விதைகள் தேவையற்ற கொழுப்புகளை எரித்து இதய நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றும். புற்றுநோய்கள், இரத்தசோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது .

6. சுவாச பிரச்சினைகளுக்கு

பாகற்காய் இலை, துளசி இலை இரண்டையும் சேர்த்து அரைத்து சுண்டக்காய் அளவு எடுத்து தேனில் குழைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி போன்றவை குணமாகும்.

7. ரத்தப்போக்கு குணமாக

பாகற்காயை சாறு பிழிந்து அதனுடன் சர்க்கரை சேர்த்து தினமும் 2 வேளை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர மூல நோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.

பாகற்காய் சூப்

அடிக்கடி பாகற்காய் சூப் சாப்பிட்டு வந்தால் தோல்களுக்கு மினுமினுப்பை தரும். மேலும் இளமையான தோற்றத்தையும் தரும். கண் நோய்களுக்கும் சிறந்தது.
குடலில் உள்ள புழுக்களை அழிக்கிறது. இரைப்பை சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்லது. மேலும் வீக்கம், கட்டிகளை குணமாக்கும்.

முக்கிய குறிப்பு :

பாகற்காயை அளவாகவே பயன்படுத்த வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

1. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்
2. பசியை தூண்டும்
3. இரத்தசோகையை போக்கும்
4.தோல் நோய்களை குணமாக்கும்
5.இரத்தத்தை சுத்தப்படுத்தும்
6.செரிமானத்தை அதிகரிக்கும்

பாகற்காய் விதை நன்மைகள்

விதை இதய நோய்களிலிருந்து காக்கிறது. புற்றுநோயை வரவிடாமல் தடுக்கிறது.

பாகற்காய் தீமைகள்

பாகற்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலியை உண்டாக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − thirteen =

error: Content is protected !!