அம்மான் பச்சரிசி பயன்கள்
அம்மான் பச்சரிசி என்பது கீரை வகையை சார்ந்த ஒரு மூலிகையாகும். தமிழகமெங்கும் மழைக்காலங்களில் தானே வளரக்கூடியது. இதன் இலைகள் ஈட்டி வடிவத்தில் காணப்படும்.
இதன் முக்கிய குணம் வயிற்றுப்பூச்சி வெளியேற்றுதல், மலச்சிக்கலை நீக்குதல், உடல் சூட்டை தனித்தல், நரம்புகளில் ஏற்படம் வீக்கத்தை குணமாக்குதல் முக்கியமானவை.
வாய் , உதடு, நாக்கு வெடிப்பு குணமாக
அம்மான் பச்சரிசி இலைகளை கூட்டாகவோ, பொறியலாகவோ சமைத்து உண்ண வாய் , உதடு, நாக்கு போன்றவற்றில் ஏற்படும் வெடிப்பு குணமாகும். உடல் வறட்சி அகலும்.
உடல் பலம் பெற
அம்மன் பச்சரிசி இலையை தூதுவளை இலையுடன் சேர்த்து துவையல் செய்து சாப்பிட உடல் பலம் பெறும்.
உடல் எரிச்சல் தீர
சிலருக்கு உடல் வெப்பம் மிகுதியால் அதிகமாக எரிச்சல் உண்டாகும் அவர்கள் கீழாநெல்லி, அம்மான் பச்சரிசி சம அளவு எடுத்து அரைத்து காலை, மாலை தயிரில் கலந்து உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல் ஆகியவை தீரும்.
தாய்ப்பால் பெறுக
இதன் பூ 30 கிராம் அளவு எடுத்து அரைத்து 5 கிராம் அளவு பாலில் கலந்து ஒரு வாரம் சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.
வெள்ளைப்படுதல் நீங்க
இலையை அரைத்து 10 கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து சாப்பிட பெண்களுக்கு உடல் சூட்டினால் ஏற்படும் வெள்ளைப்படுதல் நீங்கும்.
முகப்பரு நீங்க
இதன் செடியில் இருந்து வரும் பாலை முகப்பருக்கு தடவி வர மறையும்.பால்பரு மற்றும் நகச்சுற்றுக்கு தடவி வர மறையும்.
சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல்
இதன் இலையை நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து காலைவேளையில் 3 நாட்களுக்கு சாப்பிட்டு வர சிறுநீருடன் இரத்தம் கலந்து போவது குணமாகும். மலச்சிக்கல், உடல் நமைச்சல் ஆகியவை தீரும்.
பாதங்களில் ஏற்படும் எரிச்சல் குணமாக
அம்மான் பச்சரிசியோடு மஞ்சள் கலந்து சேர்த்து அரைத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து பாதங்களில் தடவி வர விரைவில் குணமாகும். மேலும் கட்டிகளுக்கும் இதை தடவ உடைத்து ஆறும்.
வாய்ப்புண் குணமாக
இதன் செடியை அரைத்து சாறுபிழிந்து சிறிது தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும்.
கலவை கீரை சமையல்
கிராமங்களில் அம்மான் பச்சரிசி கீரையுடன் மணத்தக்காளி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி ஆகிய கீரைகளுடன் சேர்த்து கீரை கலவை சமைத்து உண்பது வழக்கம். இதுபோன்று சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு என்பதே இருக்காது. உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
அம்மான் பச்சரிசியை துவையலாகவும், கூட்டாகவும், பொறியலாகவும் அல்லது மணத்தக்காளி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி கீரைகளுடன் சேர்த்து கலவை கீரையாகவும் சமைத்து உண்ணலாம்.