மூலிகைகள்

தூதுவளை மருத்துவ பயன்கள்

தூதுவளை சிறிய முட்களும் ஊதா நிற பூக்கள் கொண்ட செடியினம். வேர், செடி, பூ, இலை, காய் என அனைத்துமே மருத்துவ குணமுடையது. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு சிறந்த மருந்தாகும்.

தூதுவளை மருத்துவ பயன்கள்

  • இதன் இலையை நெய் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட உடல் பலம் பெரும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • தூதுவளையை சாறு எடுத்து நெய்யில் சேர்த்து காய்ச்சி காலை மாலை 5 மிலி அளவு சாப்பிட்டு வர தொண்டை வலி, சளி, இருமல் ஆகியவை நீங்கும்.
  • தூதுவளைக் காயை நன்றாக காயவைத்து தயிரில் போட்டு பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து சாப்பிட்டுவர இதய பலவீனம் நீங்கும்.
  • இதன் இலை, பூ, காய், வேர் ஆகியவை 50 கிராம் அளவு எடுத்து, 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மிலியாக காய்ச்சி தினமும் காலை, மாலை பருகி வர இளைப்பு, மூச்சு திணறல், சுவாசகசச் சளி, இருமல் ஆகியவை தீரும்.
  • 10 தூதுவேளை பூக்களை பாலில் போட்டு காய்ச்சி தினமும் சாப்பிட்டு வர உடல் பலம் பெரும், முகம் பொலிவு பெரும்.

தூதுவளை குடிநீர்

தூதுவளை (solanum trilobatum), கண்டங்கத்தரி (solanum surattense), பற்பாடகம்(mollugo cerviana) விஷ்ணுகாந்தி(evolvulus alsinoides) ஒவ்வொன்றிலும் 10 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மிலியாக காய்ச்சி 1 மணி நேரத்திற்கு ஒருமுறை 5மிலி அளவு கொடுத்து வர நிமோனியா, டைபாய்டு குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =

error: Content is protected !!