மூலிகைகள்

மஞ்சள் காமாலையை குணமாக்கும் கீழாநெல்லி

கீழாநெல்லி ஈரமான பகுதிகளில் தானே வளரக்கூடியது. செடி முழுவதும் மருத்துவ பயனுடையது. மஞ்சள் காமாலை, இரத்த சோகை, சிறுநீரக நோய்களுக்கு சிறந்த மூலிகையாகும்.

கீழாநெல்லி மருத்துவ பயன்கள்

  • இதன் செடி முழுவதையும் காயவைத்து இடித்து பொடிசெய்து 5 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, இரத்தசோகை, சிறுநீரக நோய்கள் அனைத்தும் குணமாகும்.
  • கீழாநெல்லி இலையை அரைத்து 10 கிராம் அளவு தினமும் காலையில் சாப்பிட கல்லீரல் வீக்கம் குறையும், செயல்படாத கல்லீரலை செயல்பட வைக்கும்.
  • இதன் இலை பொடியை 5 கிராம் அளவு பாலில் கலந்து தினமும் சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும். சிறுவர்களுக்கு இது சிறந்த ஊட்டச்சத்தாகும்.
  • நல்லெண்ணெயில் கீழாநெல்லி இலை சாறுடன் பொன்னாங்கண்ணி சாறு சமஅளவு கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர பார்வைக்கோளாறு நீங்கும்.
  • கீழாநெல்லி இலையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்க தோல் நோய்கள் நீங்கும்.
  • கீழாநெல்லி இலையுடன் ஓரிதழ்தாமரை சம அளவு சேர்த்து அரைத்து 5 கிராம் அளவு 45 நாட்களுக்கு சாப்பிட்டு வர இளநரை நீங்கும் இளமையான தோற்றத்தை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =

error: Content is protected !!