மூலிகைகள்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆவாரம்பூ

மஞ்சள் நிறப்பூக்களை கொண்ட செடியினம். இதன் பூ, இலை, காய், வேர் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது. இது நீரிழிவு (சர்க்கரை) நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

ஆவாரம்பூ மருத்துவ பயன்கள்

  • ஆவாரம் இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
  • ஆவாரம் பூ, காய், இலை ஆகியவற்றை ஒன்றாக காயவைத்து இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு காலை, மாலை இருவேளை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வர மிகுந்த தாகம், உடல் எரிச்சல், உடல் சோர்வு ஆகியவை தீரும். மேலும் உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
  • ஆவாரம் பூவை பச்சை பயறுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் குணமடையும்.
  • ஆவாரம்பூவை இடித்து பொடிசெய்து உடலில் தேய்த்து குளித்து வர உடல் பொலிவு பெறும். தோல் நோய்கள் குணமாகும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த

ஆவாரை சூரணம் ( பூ, இலை, காய், வேர், பட்டை) 10 கிராம் அளவு வெந்நீரில் கலந்து தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 13 =

error: Content is protected !!