மூலிகைகள்

துளசி மருத்துவ பயன்கள்

துளசி பயன்கள் என்பது ஆன்மிகத்திலும் மருத்துவத்திலும் இருந்தாலும் அதன் மருத்துவ பயன்களுக்காகதான் கோவில்களில் பயன்படுத்தப்படுகிறது அதிக எதிர்ப்பு திறனை உடலுக்கு தருகிறது.

எனவே கோவில்களில் இது பொது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது. துளசியை சாப்பிட்டால் மட்டுமல்ல, சுவாசித்தால் கூட உடலுக்கு நன்மை தான் என்று உங்களுக்கு தெரியுமா?

ஏதோ சில காரணங்களால் துளசி மாடமும் துளசி தீர்த்தமும் இந்து மதத்தை சார்ந்தது போல அனுமானம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இது மதத்தை தாண்டிய மாபெரும் மருத்துவம்.

துளசி மடத்தை தினமும் சுற்றி வருதல், தினமும் காலையில் துளசி நீர் பருகி வந்தால் பொதுவாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து தீர்வுக் காணலாம்.

ஏன், அன்றாடம் நமது உடலுக்கு தொல்லைத் தரும் வகையில் அமையும் சிறு சிறு உடல் உபாதைகள், கோளாறுகள் ஏற்படாமல் கூட காக்க முடியும். இதனால் தான் துளசி மாடம் , துளசி நீர் புனிதமாக கருதப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் உரைத்த அனைத்திற்கும் பின்னணியில் மருத்துவம் இருக்க தான் செய்கிறது.

மன அழுத்தம் குறையும்

துளசி அழுத்த எதிர்ப்பு தன்மை கொண்டது. உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்சை அதிகரிக்க செய்து அழுத்தத்தின் அளவை குறைக்க துளசி பெருமளவில் உதவுகிறது.

நுரையீரல் தொற்று

அன்றாடம் துளசியை சிறிதளவு வெறும் வாயில் போட்டு மென்று உண்ணுதல் அல்லது துளசி நீர் அல்லது துளசி டீ பருகுவது போன்றவை சளி மற்றும் நுரையீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கின்றன. முக்கியமாக துளசி நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மைக் கொண்டது ஆகும்.

இரத்தம் சுத்தமாக

தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.

சிறுநீரகக் கோளாறுகள் நீங்க

துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.

ஆஸ்துமாவை குணமாக்கும்

உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது. துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.

உடல் இயக்கத்தை சீராக வைக்க உதவுகிறது

இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதால் இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.

வாய் துர்நாற்றம் நீங்க

துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும் பால் விளை நோய்களையும் நீக்கும். மேலும் துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

தோல் நோய்கள் குணமாக

எலுமிச்சை சாறுடன் துளசி சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு பற்று போட விரைவில் குணமாகும்.

முகப்பரு நீங்க

துளசி, அம்மான் பச்சரிசி சம அளவு எடுத்து அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு வர முகப்பரு மறையும்.

உடல் வியர்வை நாற்றம் அகல

சிலருக்கு உடல் வியர்வை நாற்றம் அடித்துக்கொண்டே இருக்கும். என்னதான் சோப்பு போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் வியர்வை நாற்றம் அடிக்க ஆரம்பித்து விடும். இதற்க்கு குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் துளசி இலைகளை தண்ணீரில் போட்டு வைத்து குளித்து வர வியர்வை நாற்றம் அகலும்.

இடுப்பு வலி குறைய

துளசி சாற்றுடன் இஞ்சி சிறிதளவு, தாமரை வேர் சிறிதளவு சேர்த்து அரைத்து கொதிக்க வைத்து இடுப்பில் பற்று போட இடுப்பு வலி குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seven =

error: Content is protected !!