மூலிகைகள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி இந்திய மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றாகும். சித்த மருத்துவதிலிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இது மிளகு வகையை சார்ந்த தாவரமாகும்.

மேற்கு தொடர்ச்சிமலையில் அதிகளவு விளைகிறது.திப்பிலியின் காய்கள் உணவு பொருளாகவும், மருந்து பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

திப்பியில் அரிசித்திப்பிலி, யானைத்திப்பிலி என இருவகை உள்ளது. இதில் அரிசித்திப்பிலி அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவத்தில் முக்கிய சூரணமாக உள்ள திரிகடுகு சூரணத்தில் ஒரு மருந்தாக சேர்க்கப்படுகிறது. இருமல், தொண்டை சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மூலிகையாகும். இது உடலில் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

இருமல், தொண்டை கம்மல்

திப்பிலியை நன்றாக வறுத்து பொடியாக்கி 1/2 கிராம் அளவு எடுத்து தினமும் 2 வேளை தேனில் குழைத்து சாப்பிட்டு வர இருமல், தொண்டை கம்மல், பசியின்மை, வீக்கம் ஆகியவை தீரும்.

வயிற்று வலி குணமாக

திப்பிலி, சீரகம், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து லேசாக வறுத்து தூள் செய்து வைத்துக்கொண்டு ஒரு கிராம் அளவு எடுத்து நெய்யில் குழைத்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

வயிற்றுப்பொருமல், வாயு தொல்லை நீங்க

  • திப்பிலி
  • கருங்சீரகம்
  • ஓமம்
  • பெருங்காயம்

இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி ஒரு கிராமல் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட வயிற்றுப்பொருமல், வாயு, மந்தம், உணவு செரியாமை ஆகியவை குணமாகும்.

சளி, இரைப்பு நீங்க

திப்பிலி 10 கிராம், துளசி இலை 30 கிராம் உலர்ந்தது எடுத்து பொடியாக்கி 5 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர சளி, இரைப்பும் இருமல் தீரும்.

தேமல் மறைய

திப்பிலி பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் ( 48 நாட்களுக்கு ) தொடர்ந்து சாப்பிட்டு வர தேமல் மறையும்.

ஆண்மை அதிகரிக்க

திப்பிலியை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து 10 கிராம் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர வித்து உற்பத்தி அதிகரிக்கும். தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும்.

வறட்டு இருமல் நீங்க

சிலருக்கு சளி பிடித்தாலும் இல்லாவிட்டாலும் இருமல் இருந்துகொண்டே இருக்கும் அவர்களுக்கு திப்பிலி – 50 கிராம், கரிசலாங்கண்ணி – 25 கிராம் இரண்டையும் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு சுண்டக்காய்ச்சி.

பிறகு திப்பிலியையும், கரிசலாங்கண்ணியையும் எடுத்து உலர்த்தி லேசாக வர வறுத்து பொடியாக்கி 5 கிராம் அளவு தினமும் இருவேளை சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர வறட்டு இருமல், களைப்பு நீங்கும்.

இளைப்பு நோய் குணமாக

திப்பிலி பொடி, கடுக்காய் பொடி சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் 5 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து சாப்பிட இளைப்பு நோய் குணமாகும்.

வெள்ளைப்படுதல், பெரும்பாடு நீங்க

திப்பிலி – 10 கிராம், தேற்றான் கொட்டை – 5 கிராம் இரண்டையும் இடித்து பொடியாக்கி 5 கிராம் அளவு வெந்நீரில் கலந்து தினமும் காலை வேளையில் குடித்து வர வெள்ளைப்படுதல், பெரும்பாடு நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =

error: Content is protected !!