ஓமம் மருத்துவ பயன்கள்
ஓமம் மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமாக மூலிகையாகையாகும். இதன் இலைகள் சிறகுகள் போல் மெலிந்த இலைகளை கொண்டது.
இதன் காய்கள் நறுமணமிக்கது. காய் முற்றி பழமாகியபின் உலரவைத்து பயன்படுத்துவதே ஓமம் ஆகும்.நோய் கிருமிகள் நம்மை தாக்காமல் தடுக்கும் குணம் ஓமத்திற்கு உண்டு.
இலைகள் மற்றும் விதைகள் மருத்துவ பயனுடையது. ஓமத்தில் இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் , பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
உடல் பலம் பெற
சிலர் பார்க்க நல்ல பலசாலி போல் இருப்பார் ஆனால் சிறிய வேலையை கூட செய்யமுடியாது. ஏனென்றால் உடல் பலம் இருக்காது.
இதுபோன்று இருப்பவர்கள் ஓமத்தை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அதில் சிறிது பனைவெல்லம் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர உடல் நல்ல பலம் பெறும்.
தொப்பை குறைய
அன்னாசி பழம் 4 துண்டுகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் 2 ஸ்பூன் ஓமம்பொடி சேர்த்து நன்றாக வெந்தவுடன் இறக்கி மூடி வைத்து விட்டு.
அதிகாலையில் எடுத்து நன்றாக கலக்கி வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும். இது போன்று இரண்டு வாரங்களுக்கு செய்து வர வேண்டும்.
பசியின்மையை போக்க
ஓமத்தை பொடியாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க பசியின்மையை போக்கும். மேலும் வயிறு தொடர்பான பிரச்சினைகளும் தீரும்.
மந்தம்
வயிறு மந்தமாக இருந்தால் பசியிருக்காது. உடல் மிகவும் சோர்வாகவும் இருக்கும். அசீரண கோளாறு ஏற்படும். குழந்தைகளுக்கு மந்தமாக இருந்தால் மிகவும் அவதிக்கு உள்ளாவார்கள்.
இத்தகைய மந்தத்தை குணமாக்க சுக்கு, ஓமம், சித்திரமூல வேர்ப்பட்டை மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி அதனுடன் சிறிது கடுக்காய் பொடி சேர்த்து மோரில் கலந்து சாப்பிட மந்தம் நீங்கும்.
வயிற்று வலி நீங்க
ஓமத்துடன் பெருங்காயம் சிறிது உப்பு சேர்த்து பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிட வயிற்று வலி நீங்கும்.
இருமல் நீங்க
சிலருக்கு அடிக்கடி இருமல் வந்துகொண்டே இருக்கும். இது போன்று இருப்பவர்களுக்கு ஓமம், திப்பிலிவேர், முக்கடுகு, கடுக்காய் தோல், சித்தரத்தை, அக்கிரகாரம் இவற்றில் அனைத்தையும் சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி அதில் பாதி அளவு எடை பனகற்கண்டு சேர்த்து 1 ஸ்பூன் அளவு காலை, மாலை தினமும் இருவேளை சாப்பிட்டு வர இருமல் நீங்கும்.
அஜீரண கோளாறு, வயிற்று பொருமல் நீங்க
100 கிராம் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து நன்றாக காயவைத்து அது கால் லிட்டர் அளவுக்கு வந்ததும் இறக்கி ஆறியதும் 100மிலி வீதம் குடித்து வர அஜீரண கோளாறு, வயிற்று பொருமல் ஆகியவை நீங்கும்.
மூட்டு வலி நீங்க ஓமம் எண்ணெய்
- ஓம எண்ணையை மூட்டு வலிக்கு தேய்த்து வந்தால் மூட்டு வலி உடனே குணமாகும். இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
- மேலும் மார்பு சளி இருந்தாலும் இந்த ஓம எண்ணையை தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- பல் வலி இருந்தாலும் இந்த எண்ணையை பஞ்சில் நனைத்து பல் வலி இருக்கும் இடத்தில் சிறிது நேரம் அழுத்தி வைத்திருந்தால் பல் வலி குணமாகும்.
ஓமம் மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமாக மூலிகையாகையாகும். இதன் இலைகள் சிறகுகள் போல் மெலிந்த இலைகளை கொண்டது. இதன் காய்கள் நறுமணமிக்கது. காய் முற்றி பழமாகியபின் உலரவைத்து பயன்படுத்துவதே ஓமம் ஆகும்.