தான்றிக்காய் பயன்கள்
தான்றிக்காய் மிகப்பெரிய மர இனமாகும். இது 120 அடி வரை வளரக்கூடியது. மலைப்பகுதிகளில் அதிகமாக காணப்படும். இதன் இலைகள் மாட்டு தீவனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
சித்த மருத்துவத்தில் தான்றிக்காய் மிக முக்கிய மூலிகையாகும். திரிபலாவில் சேர்க்கப்படும் 3-ல் தான்றிக்காய் ஒரு மூலிகையாகும். உடலுக்கு நல்ல பலத்தை தரக்கூடியது.
கண் பார்வை தெளிவு பெற
தான்றிக்காய் பொடியை 3 கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட கண் பார்வை தெளிவு பெறும். மேலும் பித்த நோய்கள் தீரும். இரவில் தூங்கும் பொது வெளிப்படும் வாய்நீர் பிரச்சினை தீரும்.
குடல் சார்ந்த பிரச்சினைகள் தீர
தான்றிக்காயை கொண்டையை நீக்கி வறுத்து எடுத்து பொடியாக்கி 1 கிராம் அளவு எடுத்து சர்க்கரை சேர்த்து கலந்து தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வர குடல் பலமின்னமை நீங்கும், மலச்சிக்கல், சீதபேதி, இரத்தமூலம் ஆகியவை தீரும்.
வாதத்தை தணிக்கும்
தான்றிக்காய் பொடியை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட வாதத்தை தனிக்கும். இருமல் நீங்கும், கண் நோய்களுக்கு சிறந்தது.
புண்கள் ஆற
காயத்தினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண்கள் ஆற தான்றிக்காயை நீர் விட்டு அரைத்து பூச குணமாகும்.
மலச்சிக்கல் நீங்க
- தான்றிக்காய் – 100 கிராம்
- கடுக்காய் – 100 கிராம்
- ஆவாரம்பூ – 50 கிராம்
- நிலாவரை – 50 கிராம்
- ரோஜாப்பூ – 50 கிராம்
- வாய்விளங்கம் – 50 கிராம்
இவற்றை உலர்த்தி ஒன்றாக தூள் செய்து வைத்துக்கொண்டு இரவு உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும் . குடல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
பல் வலி குணமாக
தான்றிக்காய் நெருப்பில் சுட்டு தோல் தோலை மட்டும் எடுத்து தூளாக்கி ஒரு ஸ்பூன் அளவு தினமும் வெந்நீரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட பல் வலி குணமாகும். மேலும் பல் சார்ந்த நோய்கள் குணமாகும்.
உடல் உறுதி பெற, இரத்த அழுத்தம் சீராக
- தான்றிக்காய் – 100 கிராம்
- தேற்றான் கொட்டை – 100 கிராம்
- சாரப்பருப்பு – 100 கிராம்
- சாதிக்காய் – 50 கிராம்
- சாலா மிசிரி – 50 கிராம்
- சுக்கு – 25 கிராம்
- மிளகு – 25 கிராம்
- திப்பிலி – 25 கிராம்
இவற்றை ஒன்றாக இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டு தினமும் இருவேளை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு பால் அருந்திவர உடல் இரும்பைப்போல் உறுதியாகும். இதயம் பலம் பெறும். இரத்த அழுத்தம் சீராகும்.
மூல நோய்கள் குணமாக
- தான்றிக்காய் – 100 கிராம்
- கடுக்காய் – 100 கிராம்
- நெல்லிக்காய் – 100 கிராம்
- நாயுருவி இலை – 100 கிராம்
- அம்மான்பச்சரிசி – 100 கிராம்
- துத்தி இலை – 100 கிராம்
- பிரண்டை – 100 கிராம்
- அத்தி – 100 கிராம்
- பொடுதலை – 100 கிராம்
- ஆவாரம்பூ – 100 கிராம்
இவற்றை ஒன்றாக அரைத்து தூளாக்கி தினமும் இருவேளை உணவுக்கு பிறகு 5 கிராம் அளவு 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர மூலம், இரத்த மூலம், சீழ் மூலம், ஆசன வாய் அரிப்பு, ஆசன வாய் கடுப்பு ஆகிய அனைத்து நோய்களும் தீரும்.