உடல் நலம்

உடல் வலியை நீக்கும் சுலபமான வைத்திய முறைகள்

உடல் வலி நம்மை மிகவும் மந்தமாகவும், சோர்வையும் உணரவைத்து எந்த ஒரு வேலையையும் முழுமையாக செய்ய விரும்பத்தகாத ஒரு உணர்வை அளிக்கும். உடலி வலியானது அளவுக்கு அதிகமான உடல் எடையை தூக்குவதினாலும், அதிக நேர உடற்பயிற்சியினாலும் ஏற்படும். சிலபேருக்கு நீண்ட தூர பயணத்தினாலும் ஏற்படும் அல்லது பழக்கம் இல்லாத ஒரு வேலையை புதிதாக செய்யும் பொழுதும் ஏற்படும்.

அறிகுறிகள்

  • உடலின் பல பகுதிகளில் வலிகள் இருக்கும்.
  • உடல் சோர்வு, தூக்கமின்மை, பதற்றம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
  • தூங்கி எழும்போது உடல் மிகுந்த சோர்வுடன் இருக்கும்.
  • மூட்டுகளில் வலி ஏற்படும்.

உடலில் வலி ஏற்படும் காரணங்கள்

  • உடலில் நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும்.
  • அதிக உடல் உழைப்பு.
  • நீண்ட தூர பயணம் மற்றும் தூக்கமின்மை.
  • பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படும்.

அமுக்கிரா சூரணம்

அமுக்கிரா சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலில் ஏற்படும் வலியை நீங்கி உடல் நல்ல புத்துணர்ச்சி பெறும். மேலும் நரம்புத்தளர்ச்சி நீக்கும் ஆண்மை அதிகரிக்கும்.

ஓரிதழ் தாமரை

ஓரிதழ் தாமரை பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர வலி நீங்கி உடல் நல்ல புத்துணர்வு பெறும்.

பீட்ரூட்

இதை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது ஜூஸ் செய்து வாரம் இருமுறை பருகிவரலாம் இது மனஅழுத்தத்தை குறைத்து உடலை நல்ல சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

கிராம்பு

கிராம்பை பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவர உடம்பு வலி நீங்கும். மேலும் உடல் உறுப்புகள் நல்ல பலம் பெறும் .

திரிகடுகு சூரணம்

திரிகடுகு சூரணத்தை அரை கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அல்லது தேனில் குழைத்து தினமும் காலையில் சாப்பிட உடல் வலி நீங்கி நல்ல சுறுசுறுப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =

error: Content is protected !!