செரிமான கோளாறு
செரிமான கோளாறு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்திற்க்காக ஏற்படுகிறது. ஏப்பம் வருவதை வைத்தே என்ன காரணத்திற்க்காக அஜீரணம் ஏற்படுகிறது என்பதை அறியலாம்.
சாப்பிட்டவுடன் மந்தமான நிலை ஏற்படும். செரியாமையை 2 வகையாக பிரிக்கலாம். உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் கோளாறு காரணமாக இருக்கலாம். மற்றொன்று சாதாரணமாக இருக்கலாம்.
செரிமானமின்மை
சாதாரணமாக செரிமானமின்மை உணவு சாப்பிட்டபின் ஒருவித குமட்டல், ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகளாக காட்டும்.
சாதரண செரிமானமின்மைக்கு காரணம்
அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிடுவது. அதிகமான காரம், புளிப்பு போன்ற உணவுகளை சாப்பிடுவது. தூக்கமின்மை, கோபம், படபடப்பு போன்றவைகளும் இதற்கு அடிப்படை காரணமாகும். அதிகமான எண்ணைய் பலகாரங்கள் வயிற்றுக்கு அதிக தொந்தரவுக்கு காரணமாகும்.
அதிகமாக டீ, காபி குடிப்பதும், மது, புகைபிடிப்பது போன்ற பழக்கவழக்கங்கள் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்சினைகள் வந்தால் அடிக்கடி மாத்திரைகள் சாப்பிடுவதும் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.
உடல் உறுப்பு கோளாறு
உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் கோளாறு காரணமாக அசீரனம் ஏற்படும். அதாவது உணவுக்குழாய்களில் ஏற்படும் அழற்சி ஏற்பட்டால் உணவினை உண்பது கடினமாக இருக்கும்.
இரைப்பையில் தோன்றும் அழற்சி காரணமாகவும் அசீரணம் ஏற்படலாம். இரைப்பை ஏற்றுக்கொள்ளாத சில உணவுகள் அதாவது பால், சாக்லேட், பீன்ஸ், மொச்சை போன்ற உணவுகளை இரைப்பை ஏற்றுக்கொள்ளாதபோது இது போன்ற அசீரணம் ஏற்படும் இதனால் வயிற்று வலி ஏற்பட்டு வயிறு உப்புசம் உண்டாகும்.
செரிமானமின்மையுடன் உடல் வெளுத்து காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துகொள்வது சிறந்தது ஏன் என்றால் அது இரைப்பை புற்றுநோயாக கூட இருக்கலாம்.
செரிமானமின்மை என்பது குடல் மற்றும் இரைப்பை நோய்களால் மட்டும் வருகிறது என்று எண்ணக்கூடாது சிறுநீரகம், மூளைநரம்பு, இருதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளில் தோன்றும் நோய்களாலும் ஏற்படலாம்.
நாள்பட்ட செரிமான கோளாறுகளை அலசியமாக எண்ணக்கூடாது உடனே சி.டி , அல்ட்ராசவுண்ட் போன்ற ஸ்கேன்கள் இதன் தன்மையை துல்லியமாக கண்டறிய உதவும்.
செரிமானமின்மையை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் உடனே அதற்கு உண்டான சிகிச்சையை மேற்கொண்டால் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.
செரிமான கோளாறுகள் குணமாக
- கரும்புச்சாறு அடிக்கடி சாப்பிட்டு வர செரிமானக்கோளாறுகளை சரி செய்கிறது.
- குதிரைவாலி அடிக்கடி சாப்பிட செரிமானக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரி செய்கிறது.
- ஆரஞ்சு பழம் குடல் புண்களை குணமாக்குவதோடு செரிமான கோளாறுகளையும் சரி செய்கிறது.
- பீட்ரூட் சாறு அஜீரண கோளாறை சரி செய்கிறது எனவே செரிமான கோளாறு உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி சாப்பிடவது மிகவும் நல்லது.
- சோம்புவில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளதால் செரிமானத்திற்கு இது உதவுகிறது.
- வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் பிரண்டை சிறந்ததாகும். பிரண்டையை ரசம் அல்லது துவையலாக செய்து சாப்பிட வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
திரிகடுகு சூரணம்
செரிமானக்கோளாறுகளை நீக்குவதில் மிளகு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தனியாக சாப்பிடுவதை விட திரிகடுகு சூரணத்தில் மிளகு சேர்ப்பதால் திரிகடுகு சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அசீரண கோளாறுகள் நீங்குவதோடு, வயிறு உப்புசம், ஏப்பம், வாந்தி, இருமல் போன்றவைகளும் குணமாகும்.