பழங்கள்மூலிகைகள்

பப்பாளி பயன்கள்

பப்பாளி பழம் வருடம் முழுவது கிடைக்கக்கூடிய பழமாகும். பப்பாளிப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் முக்கிய பங்களிப்பை தருகிறது. பப்பாளியில் ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின்கள் ஏ, சி, இ போன்ற நம் உடலுக்கு அன்றாட தேவைகளான சத்துக்களை தருவதால் தினமும் சாப்பிடுவது சிறந்தது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மையாகவும், காயங்களை விரைவில் ஆற்றவும், வீக்கத்தை குறைக்கவும், மூட்டுவாத நோய்களுக்கும் சிறப்பாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வயிற்றுப்பூச்சிகள் வெளியேற

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும். வயிற்றுப்புண் குணமாகும்.

குழந்தைகளுக்கு பல், எலும்பு பலம் பெற

குழந்தைகளுக்கு பப்பாளிப்பழத்தை கொடுத்து வந்தால் பல் மற்றும் எலும்புகள் வலுப்பெறும். கண் பார்வைக்கும் மிக நல்லது. குழந்தைகளின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகமாக்கும். போலிக் ஆசிட் அதிமாக உள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது.

மாதவிலக்கு பிரச்சனை தீர

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு சிக்கல் தீர பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வர தீரும் அல்லது பப்பாளிக்காயை சமைத்து உண்ணலாம்.

உயிரணு உற்பத்திக்கு

ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும். மேலும் கல்லீரலில் உள்ள பிரச்சினைகளை நீக்குகிறது.

பப்பாளி ஜூஸ்

காலையில் பப்பாளியை  ஜூஸ் செய்து சாப்பிட்டு வர உடல் கழிவுகளை வெளியேற்றும். மலச்சிக்கல், நெஞ்செரிச்சலை நீக்கும். உடல் எடை சரியாக இருக்க உதவும்.

பப்பாளி கூட்டு

பப்பாளிக்காயை  கூட்டு செய்து சாப்பிட்டுவந்தால் உடல் எடை குறையும். மேலும் வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்கும். 4 வாரங்கள் சாப்பிட உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும். சிறுநீரில் சர்க்கரை அளவு குறையும். பிரசவம் ஆன பெண்கள் சாப்பிட பால் நன்றாக சுரக்கும்.

பப்பாளி தரும் அழகு

  • நன்றாக பழுத்த பப்பாளியை பிசைந்து அதில் சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி நன்றாக ஊறியதும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகச்சுருக்கம் நீங்கி முகம் பொலிவு பெறும்.
  • முகத்தில் உள்ள சிறு சிறு முடிகளை அகற்ற பப்பாளிப்பழத்தை பிசைந்து அதில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வர முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கும்.
  • பப்பாளிப்பழத்தை மசித்து அதில் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவி வர முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.

அழகு சாதன பொருட்கள்

சோப், பவுடர், கீரிம் போன்ற அழுகு சாதன பொருட்கள் பப்பாளியை கொண்டு அதிகமாக தயாரிக்கப்படுகிறது. பப்பாளி பழம் பிளேவரில் அதிகமான அழுகு பொருட்கள் இப்பொழுது அதிகமாக விற்பனையாகின்றது. அழகு நிலையங்களிலும்  அதிகளவு பயப்படுத்துகின்றனர்.

பப்பாளி இலைகள்

இலையை நன்றாக அரைத்து காயங்களுக்கு பூசிவர காயங்கள், வீக்கங்கள்  விரைவில் குணமடையும்.

பப்பாளி தீமைகள்

பப்பாளி அதிகமாக சாப்பிட்டால் குடலில் பிரச்சினைகளை ஏற்படுத்தி இரைப்பைக்கு பாதிப்பை கொடுக்கும். தொண்டைக்கு எரிச்சலை தரும். வயிற்றுப்போக்கு உண்டாகும்.

குறிப்பு : கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பேறுக்காக இருப்பவர்கள் பப்பாளிப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + seventeen =

error: Content is protected !!