திரிகடுகு சூரணம்
திரிகடுகு சூரணம் சித்த மருத்துவத்தில் பல மருந்துகளுக்கு துணை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் தனித்தனியாக இடித்து சலித்து பிறகு ஒவ்வொன்றிலும் சமஅளவு எடுத்து கலந்து வைத்துக்கொள்ளவும் இதுவே திரிகடுகு சூரணமாகும்.
திரிகடுகு சாப்பிடும் முறை
1 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிடலாம். சிறியவர்களுக்கு 1/2 கிராம் அளவு கொடுக்கலாம்.
திரிகடுகு பயன்கள்
- வாயு – அஜீரணம்- ஏப்பம் குணமாகும்.
- பசியின்மையை போக்கி பசியை தூண்டும்.
- செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல் ஆகியவை குணமாகும்.
- வாந்தி பேதியை குணமாக்கும்.
- தொண்டை புண்,தொண்டைக்கம்மல் வீக்கம், இருமல், சளியை குணமாக்கும்.
- ஆண்மையை அதிகரிக்கும்.
- ஈரலுக்கும் பலத்தைக் கொடுக்கும்.
தீரா தலைவலிக்கு
திரிகடுகு சூரணத்தை பாலில் போட்டு குழைத்து நெற்றியில் பற்று போட தீரா தலைவலி குணமாகும்.
நரம்புகள் வலிமை பெற
ஒரு கிராம் அளவு திரிகடுகு சூரணத்தை வெந்நீரில் போட்டு கலந்து தினமும் இருவேளை குடித்து வர நரம்புகள் வலிமை பெறும். இதய நோய்களும் குணமாகும்.
மூச்சுத்திணறல் தீர
திரிகடுகு சூரணம் ஒரு கிராம், சிறுகுறிஞ்சா வேர் சூரணம் ஒரு கிராம் இரண்டையும் வெந்நீரில் கலந்து குடித்து வர மூச்சுத்திணறல் குணமாகும்.
வாதம், சுரம் குணமாக
சித்தாமுட்டி வேர் சூரணம் 10 கிராம் அளவு 100மில்லி தண்ணீரில் போட்டு 25மில்லியாக காய்ச்சி 1 ஸ்பூன் திரிகடுகு சூரணம் சேர்த்து தினமும் இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட வாதம், சுரம் ஆகியவை தீரும்.