திரிபலா சூரணம் பயன்கள்
திரிபலா சூரணம் என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்ததாகும். இவற்றை தனித்தனியாக நன்றாக காயவைத்து விதைகளை நீக்கி பிறகு சம அளவு எடுத்து இடித்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
அளவு
திரிபலா சூரணம் 5 கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிடலாம் அல்லது தேன், நெய் இவற்றில் குழைத்து சாப்பிடலாம்.
குணம்
உட்புற மற்றும் வெளிப்புற புண்களுக்கு இச்சூரணம் நல்ல பலனை தரும். மன அழுத்தத்தை போக்கும்.
இரத்த சோகைக்கு
திரிபலா சூரணத்தை தினமும் இருவேளை என 48 நாட்கள் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும். உடல் நல்ல சுறுசுறுப்பாக இயங்கும்.
கண்நோய்கள் தீர
கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மிகச்சிறந்த மருந்தாகும். உடல் இளைப்பு உள்ளவர்களும் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனைத்தரும்.
ஆசனவாய் புண்களுக்கு
திரிபலா சூரணத்தை 10 கிராம் அளவு எடுத்து 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 1/4 லிட்டராக கட்சி வடிகட்டி ஆறவைத்து ஆசன வாயை கழுவி வர புண்கள் ஆறிவிடும்.
ஞாபக சக்தி அதிகரிக்க
5 கிராம் அளவு திரிபலா சூரணத்தை பாலில் கலந்து குடித்து வர நல்ல ஞாபக சக்தி உண்டாகும். இருமல் – ஆஸ்த்துமா, தொண்டைக்கட்டு ஆகியவை குணமாகும்.
என்றும் இளமைக்கு
வருடத்திற்கு ஒருமுறை ஒரு மண்டலம் திரிபலா சூரணத்தை சாப்பிட்டுவந்தால் முதுமையை நெருங்க விடாமல் என்றும் இளமையாக இருக்கு உதவுகிறது.
மலச்சிக்கல்
திரிபலா சூரனைத்தை வெந்நீரில் போட்டு காலை, மாலை என இருவேளை சாப்பிட மலச்சிக்கலை நீக்குவதோடு, குடலில் உள்ள புழுக்களையும் நீக்கும்.