மூலிகைகள்

விஷக்காய்ச்சலை குணமாகும் விஷ்ணு கிராந்தி

விஷ்ணு கிராந்தி சிறிய இலைகளை கொண்ட செடி வகை இனம். இது ஈரப்பதமுள்ள இடங்களில் தானே வளரக்கூடியது. இது நீல நிற மலர்களை கொண்டது. மேலும் வெள்ளை, செந்நிற மலர்களும் சில இடங்களில் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் 64 வகையான காய்ச்சல் மனிதனை தாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கடுமையான விஷக்காய்ச்சலுக்கு விஷ்ணு கிராந்தியை தான் பயன்படுத்தி வந்தார்கள்.

திறந்திட்ட விஷ்ணு சுரந்த தனைக்கொணர்ந்து
செப்பமாய் மண்டலந்தான் பாலிலரைத்துண்ணு
மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும்
மாசற்ற எலும்புக்குள் சுரம்தான் போகும்

கறந்திட்ட தேகமது கருத்து மின்னும்
கண்ணொளிதான் யோசனை தூரந்தான் காணும்
பிறந்திட்ட சுவாசமெல்லாம் இறுகி ஏறும்
ஏற்றாமாம் சுழிமுனையும் திறந்து போமே.

விச காய்ச்சல் குணமாக

விஷ்ணு கிரந்தி இலை, ஆடாதோடை இலை, துளசி, தும்பை, வெள்ளறுகு ஆகியவற்றை சமஅளவு சேர்த்து புட்டு அவிப்பது போல் அவித்து எடுத்து அதனை சாறு பிழிந்து 15மிலி அளவு காலை மாலை என இருவேளை சாப்பிட விச காய்ச்சல் குணமாகும்.

வாத நோய் குணமாக

விஷ்ணுகிராந்தி செடி ( செடி, வேர், பூ) அனைத்தையும் நிழலில் உலர்த்தி பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து தினமும் காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட வாதம், பித்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும். இளைப்பு, எலும்புருக்கி நோய்கள் அனைத்தும் குணமாகும்.

குழந்தை பேறு உண்டாக

விஷ்ணு கிராந்தி, ஓரிதழ் தாமரை இரண்டையும் பால் சேர்த்து அரைத்து மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் சாப்பிட குழந்தை பேறு உண்டாகும்.

சிறுநீரில் இரத்தம்

விஷ்ணு கிராந்தி சமூலம் ( பூ, வேர், இலை) ஆவாரை வேர் பட்டை சேர்த்து இடித்து பொடியாக்கி எலுமிச்சம்பழம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர சிறு நீரில் இரத்தம் கலந்து போவது குணமாகும்.

உடல் பலம் உண்டாக

விஷ்ணு கிராந்தி, ஓரிதழ்த்தாமரை, கீழாநெல்லி மூன்றையும் சமஅளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பாட்டிற்கு பிறகு காலை, மாலை என இரண்டுவேளையும் சாப்பிட்டு பிறகு பால் சாப்பிட்டு வர வெட்டை சூடு, நரம்பு தளர்ச்சி போன்ற நோய்கள் குணமாகும். உடல் பலம் உண்டாகும்.

சளி, இருமல் குணமாக

விஷ்ணு கிராந்தியை காயவைத்து பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வர சளி, இருமல், காய்ச்சல், உட் சூடு முதலியவை குணமாகும்.

விஷ்ணுகிராந்தி கஷாயம்

  • விஷ்ணுகிராந்தி – 50 கிராம்
  • நிலவேம்பு – 50 கிராம்
  • பற்பாடகம் – 50 கிராம்
  • சீந்தில் கொடி – 50 கிராம்
  • ஆடாதொடை – 50 கிராம்

இவை அனைத்தையும் சேர்த்து 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி மிளகு, கிராம்பு கலந்து சாப்பாட்டிற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் தினமும் 3 வேளை குடித்து வந்தால் 5 நாட்களில் காய்ச்சல் குணமாகும் . பெரியவர்கள் 150 மிலி, குழந்தைகள் 50 மிலி குடிக்கலாம்.

டைபாய்டு காய்ச்சல் குணமாக

விஷ்ணு கிராந்தி இலையுடன் தூதுவேளை, கண்டங்கத்திரி, பற்பாடகம் ஆகியவை சமஅளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராக காய்ச்சி வடிகட்டி 10மிலி அள்வு சாப்பிட்டு வர டைபாய்டு காய்ச்சல் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − two =

error: Content is protected !!