இதயம் காக்கும் உணவுகள்
இன்றைய நகரிக்க வளர்ச்சியினால் நம்முடைய உணவு பழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. கிராமங்களில் கூட இப்பொழுது துரித உணவுகளை சாப்பிட தொடங்கிவிட்டனர். இந்த மாதிரியான உணவு பழக்கமே இதய நோய்களுக்கு வழி வகை செய்கிறது. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதனாலும் இதய நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது இது ஆராய்ச்சியிலும் நிரூபணமாகியுள்ளது.
உணவை பற்றி அதிகளவு விழிப்புணர்வு இல்லாததினால் இதய நோய்கள் வர காரணமாக அமைந்துவிடுகிறது. ஒரே நேரத்தில் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக 4 அல்லது 5 முறை சாப்பிடலாம்.
கீரை வகைகள்
கீரை வகைகள் இதயத்திற்கு மிக மிக நல்லது வாரம் இருமுறையாவது கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது. புதினா, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை துவையலாகவோ அல்லது சட்னி செய்து சாப்பிடலாம்.
காய்கறிகள்
வெள்ளரிக்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், முள்ளங்கி, சவ்சவ், பீன்ஸ்ம், பாகற்காய், காலிபிளவர், சுரைக்காய், வாழைப்பூ, குடைமிளகாய் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.
பருப்பு வகைகள்
பருப்புகளில் புரதச்சத்து நிறைந்து இருப்பதால் அனைத்து பருப்பு வகைகளையும் சாப்பிடலாம். கோதுமை, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்களும், முளைகட்டிய பயறு ஆகியவை சாப்பிடலாம்.
அசைவ உணவுகள்
மீன்கள் வாரம் இருமுறை சாப்பிடலாம். நாட்டுக்கோழி ரசம், மட்டன் கொழுப்பு இல்லாமல் சாப்பிடலாம். முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிடலாம்.
சாப்பிடக்கூடாது
உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது. அதிக கலோரிகள் உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் அதிக நேரம் பொறிக்கப்பட்ட உணவுகள் உண்பது உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்க காரணமாகிவிடும். இது மாரடைப்பு வர அதிக வாய்ப்பை உருவாக்கிவிடும். இரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் சிப்ஸ், வற்றல், அப்பளம், ஐஸ்கிரீம், ஜெல்லி, பாலில் செய்த ஸ்வீட், ஊறுகாய் போன்ற உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
புகை பிடித்தல்
புகை பிடிப்பது இதயத்திற்கு மிகவும் தீங்கானதாகும். இது இதயத்திற்கு இரத்தைதை கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பை உருவாக்கி இதயத்திற்கு அதிக பாதிப்பை தரும்.