வைட்டமின்கள் நிறைந்துள்ள உணவுகள்
இன்றைய சூழலில் உடல் வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் வைட்டமின்கள் பங்கு மிக மிக அவசியமாகிறது. ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவு வகைகளை நாம் அன்றாடம் எடுத்துகொள்ளவது நல்லது. வைட்டமின்கள் குறைபாடுகளால் வரும் நோய்களை பற்றியும் வைட்டமின்கள் நிறைந்துள்ள உணவுகளை பற்றயும் பார்ப்போம்.
வைட்டமின் ஏ
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் ஏ முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் குழந்தைகளின் எலும்புகள், பற்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. வைட்டமின் ஏ சத்து குறைந்த கண் பார்வை குறையும்.
காய்கறிகள், முருங்கை கீரை, வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு, மீன் எண்ணெய், ஈரல் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.
வைட்டமின் பி
இச்சத்து குறைந்தால் வயிறு சம்பந்தமான நோய்களான வயிறு மந்தமும், அசீரணமும் ஏற்படும். மேலும் ரத்த சோகை, இதய நோய் பாதிப்பு ஆகியவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
காய்கறிகள், கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகளவு உள்ளது.
வைட்டமின் சி
இது குறைந்தால் உடல் படபடப்புடன் காணப்படும். அதிக கோபம் வர வாய்ப்புள்ளது. பல் ஈறுகளில் ரத்த கசிவு ஏற்படும். பல் ஈறுகள் அடிக்கடி வீங்கும். எலும்புகள் உறுதி குறையும்.
பச்சைக்காய்கறிகள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, கொய்யா, வெற்றிலை போன்றவற்றில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது.
வைட்டமின் டி
இச்சத்து குறைந்தால் எலும்புகளும் பற்களும் வலுவிழக்கும். வயிறு கோளாறு ஏற்படும்.
மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் அதிகளவு வைட்டமின் டி உள்ளது. காலை வெயில் நம் உடலில் பட்டால் அதிலிருந்து வைட்டமின் டி நம் உடலுக்கு கிடைக்கும்.
வைட்டமின் ஈ
இச்சத்து குறைந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தசைகளும் பலவீனம் அடையும்.
அனைத்து கீரை வகைகள், பச்சை காய்கறிகள், கோதுமை ஆகியவற்றில் வைட்டமின் ஈ உள்ளது.