உடல் நலம்
பகலில் தூக்கம் உடலுக்கு நல்லதா? கெட்டதா?
மனிதன் சராசரியாக இரவில் 6-8 மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். இதைத் தவிர்த்து நம்முடைய வேலைப்பளுவை பொறுத்து பகலில் 20 முதல் 45 நிமிடங்கள் தூங்கலாம். இதை சரியாக கடைபிடித்தால் நம் உடலும், மூளையும் நன்றாக இயங்கும். இதில் மாற்றம் வந்தால் உடல் கோளாறுகள் ஏற்படும்.
பகலில் ஓய்வில்லாமல் உழைக்கிறோம். இதனால் நம் மூளையும், உடலும் சோர்வடைகிறது. ஆகவே இரவு தூக்கம் கண்டிப்பாக 6 முதல் 8 மணி நேரம் தூங்கவேண்டும்.
புத்துணர்ச்சி தரும்
- பகலில் சிறு தூக்கம் போடுவதால் நம் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு போட்டது போல் இருக்கும்.
- குட்டி தூக்கம் நம் உடலுக்கும், மூளைக்கும் ஓய்வு கொடுத்து இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலையும் மூளையையும் புத்துணர்வு பெற வைக்கிறது.
மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்
- பகலில் நீண்ட நேரம் வேலை செய்வதால் குட்டி தூக்கம் போடுவது மூளையின் செயல்திறனை அதிகரிப்பதுடன் இதயத்துக்கும் நல்லது என ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அதிக நேர தூக்கம் கெடுதல் தரும்
- பகல் தூக்கம் என்பது சராசரியாக 45 நிமிடத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். அப்படி சென்றால் உடலுக்கு சோம்பேறித்தனத்தையும், கெடுதலையும் தரும்.
- இரவினில் சரியாக தூங்கினாலே பகல் தூக்கம் அவசியம் இருக்காது. மதியம் அதிகளவு உணவு உட்கொண்டு அதிக நேரம் தூங்கினால் உடல் பருமன் மற்றும் பல நோய்கள் வர வாய்ப்பாக அமைகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல் தூக்கத்திற்கும் பொருந்தும்.