உடல் நலம்
மஞ்சள் காமாலை குணமாக இயற்கை வழிமுறைகள்
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடிய நோயாகும். இதை சரியாக கவனிக்க தவறினால் உயிரிழப்பு தவிர்க்கமுடியதாகிவிடும். எனவே இதை சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்தலாம்.
அறிகுறிகள்
காய்ச்சல், குமட்டல், அசதி, பசியில்லாதிருத்தல், சிறு நீர் மஞ்சளாக வருதல், மலச்சிக்கல் போன்றவையாகும்
மஞ்சள் காமாலை வராமல் தடுக்க
- கசப்பு தன்மையுடைய காய்கறிகள், கீரை வகைகளில் ஒன்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
- சரியான நேரத்தில் உறங்க வேண்டும்.
- எண்ணெய் வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மஞ்சள் காமாலையை குணமாக்க
-
- கீழாநெல்லி இலை – 25 கிராம்.
- முற்றிய வேப்பிலை – 25 கிராம்.
- மஞ்சள் தூள் – 10 கிராம்.
இவைகளை ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு இடித்து சாறு எடுத்து சிறிது சூடேற்றி 75மிலி அளவு காலை உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் நாவில் படும்படி அருந்திவரவேண்டும். மாலை நேரத்திலும் இதே போல் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலையை குணப்படுத்தலாம்.