சித்த மருத்துவம்

அஸ்வகந்தா சூரணம்

அஸ்வகந்தா மூலிகை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மூலிகையாகும். அஸ்வகந்தா மூலிகையை சித்த மருத்துவத்தில் அமுக்குரா, அமுக்கிரா, அசுவகந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என இருவகைகள் என்று அழைக்கப்படுகிறது.

அஸ்வகந்தாவை சூரணமாக செய்து பயன்படுத்தப்படுகிறது. வெளி பூச்சுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்மை கோளாறுகளுக்கு சிறந்த மூலிகையாகும்.

அஸ்வகந்தா சூரணம் செய்முறை

  • அஸ்வகந்தா கிழங்கு – 500 கிராம்
  • சுக்கு – 250 கிராம்
  • திப்பிலி – 125 கிராம்
  • மிளகு – 60 கிராம்
  • தனியா – 50 கிராம்
  • சீரகம் – 40 கிராம்
  • இலவங்கபத்திரி – 30 கிராம்
  • இலவங்கபட்டை – 30 கிராம்
  • ஏலக்காய் – 25 கிராம்
  • சிறுநாகப்பூ – 10 கிராம்
  • கிராம்பு – 5 கிராம்

செய்முறை

அஸ்வகந்தா கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி சட்டியில் பால் ஊற்றி இட்லி தட்டில் அஸ்வகந்தா கிழங்கை வைத்து புட்டு அவிப்பதுபோல அவித்து எடுத்து காயவைத்து இவற்றுடன் மேற்சொன்ன மற்ற சரக்குகளை அனைத்தையும் நன்றாக வெயிலில் காயவைத்து இடித்து சலித்து அதன் நிகரான எடைக்கு வெள்ளை சர்க்கரை இடித்து அந்த பொடியை சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

அஸ்வகந்தா சூரணம் சாப்பிடும் முறை

இச்சூரணத்தை 3 கிராம் அளவு பாலில் கலந்து காலை, மாலை என இருவேளை 20 – 40 நாட்கள் சாப்பிட வேண்டும்.

சுரம் குணமாக

இச்சூரணத்தை 5 கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர கபவாத காய்ச்சல் குணமாகும்.

ஆண்மை அதிகரிக்க

அஸ்வகந்தா சூரணத்தை பாலில் கலந்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் ( 48 நாட்கள்) சாப்பிட்டு வர ஆண்மையை அதிகரிக்கும்.

நரம்பு தளர்ச்சி

நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும், உடல் சோர்வை நீக்கி உடலை நல்ல வலுவடைய செய்யும். எலும்புகளையும் வலுவடைய செய்யும்.

மூட்டுவலி

மூட்டுவலியால் இன்று அவதிப்படுபவர்கள் ஏராளம், இதற்கு அஸ்வகந்தா சூரணம் மிகச்சிறந்த மருந்து இச்சூரணத்தை பாலில் கலந்து தினமும் 30- 40 நாட்கள் சாப்பிட்டுவர மூட்டு வலி, மூட்டு வீக்கம் பூரண குணமடையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது அஸ்வகந்தா சூரணம். மேலும் நுரையீரல் பிரச்சினை இருப்பவர்களும் சாப்பிட்ட வர நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

வீக்கம், கட்டிகள் குணமாக

இச்சூரணத்தை பாலில் குழைத்து வீக்கம், கட்டிகளில் பூசி வர குணமாகும்.

One Comment

  1. அமுக்கிரா கிழங்கின் வேறு பெயர் அஸ்வகந்தா ஆகும். அஸ்வம் என்பது
    குதிரையை குறிக்கும் அதன் ஆற்றல் இதில் இருப்பதால் அந்த பெயரினை
    பெற்றது.அளவற்ற மருத்துவ குணம்
    வாய்ந்த இந்த மாத்திரையை குறை
    திறன் ( ஹைபோ தைராய்டு ) அவதி
    யை சீராக்கும். தினமும் இரு வேளை
    2 மாத்திரைகளை உணவிற்கு பின்பு
    தொடர்ந்து சாப்பிட்டு பலன் பெறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =

error: Content is protected !!