மூலிகைகள்

மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரை முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் இதனை முடக்கத்தான் என்றனர். முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்று ஆகிவிட்டது. கொடி இனத்தை சார்ந்தது. கசப்பு தன்மை உடையது.

முடக்கத்தான் கீரையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. அல்லது சாதாரணமாக கீரையை சமைப்பது போல சமைத்து உண்ணலாம்.

அதுமட்டும் அல்லாமல் ரசம் வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும் முடக்கத்தான் கீரையை நன்றாக அலசி காயவைத்து பொடியாக்கி தோசை மாவுடன் சேர்த்து தோசை செய்து சாப்பிடலாம்.

குணம்

முடக்கத்தான் கீரையின் சிறப்பு குணம் மூட்டுகளில் இருக்கும் யூரிக் ஆசிட் எங்கு இருந்தாலும் அதனை கரைத்து சிறுநீரகத்துக்கு எடுத்து சென்று அது சிறுநீராக வெளியேறும் பொழுது அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடலில் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு நல்ல வலிமையை தருகிறது.

நரம்பு தளர்ச்சி, மூட்டுவலி நீங்கும்

முடக்கத்தான் கீரையை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலிமை பெறும் . மேலும் மூட்டுவலி, கழுத்து வலி, இடுப்பு வலியை நீக்குவதில் சிறந்த மூலிகையாகும். முடக்கத்தான் கீரையுடன் உளுந்து, புளி, சின்ன வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கி சேர்த்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர மூட்டு வீக்கம் குறையும்.

உடல் வலி நீங்க

முடக்கத்தான் வேரை உலர்த்தி பொடி செய்து 2 கிராம் அளவு எடுத்து நீரில் போட்டு தினமும் சாப்பிட்டு வர உடல் வலி, முடக்கு நோய்கள் குணமாகும்.

முடக்குவாத பிரச்சினைகளுக்கு சிறந்தது

முடக்கத்தான் என்றாலே முடக்கு வாத சம்பந்தமான பிரச்சினைகளை நீக்க கூடிய மூலிகையாகும். மேலும் கண் பார்வையை தெளிவாக்கும், வாயு தொல்லை, மலச்சிக்கலை நீக்கும்.

முடக்கத்தான் கீரை

காதுவலி குணமாக

முடக்கத்தான் கீரையை சாறு காதில் 2 சொட்டு ஊற்ற காது வலி குணமாகும்.

குடலிறக்க நோய் குணமாக

முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெய் சிறிதளவு சேர்த்து வதக்கி நெல்லிக்காய் அளவு எடுத்து பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர குடலிறக்க நோயை குணமாக்கும்.

தோல் நோய்களுக்கு சிறந்தது

முடக்கத்தான் கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் சாப்பிட்டு வர கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும். மேலும் உடலுக்கு தேய்த்து குளித்து வர தோல் நோய்கள் குணமாகும்.

விரை வீக்கம்

விரை வீக்கம் உள்ளவர்கள் முடக்கத்தான் இலையை அரைத்து பற்று போட்டுவர விரை வீக்கம் குணமாகும்.

முடக்கத்தான் கீரையை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் பல நோய்கள் குணமாகும் மேலும் உடல் சோர்வின்றி நல்ல சுறுசுறுப்பாக இருக்கும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு சிறந்த மூலிகையாகும்.

முடக்கத்தான் ரசம்

மூட்டுவலி உள்ளவர்களுக்கு முடக்கத்தான் ரசம் மிகச்சிறந்த உணவு. வாரம் ஒரு முறையாவது சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். மேலும் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கும் சிறந்தது.

வேலை பளு காரணமாக உடலி அசதி ஏற்படுபவர்கள் முடக்கத்தைத்தான் ரசத்தை சாப்பிட்டால் உடல் வலி நீங்கி நல்ல சுறுசுறுப்பாக இருக்கும்.

முடக்கத்தான் ரசம் செய்முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =