உணவே மருந்து
மூட்டு வலி, முடக்கு வாதத்தை குணப்படுத்தும் முடக்கத்தான் ரசம் செய்முறை
தேவையான பொருள்கள்
- முடக்கத்தான் – 50 கிராம்
- தக்காளி – 1
- வெங்காயம் – 1
- மிளகாய் – 3
- பூண்டு – 1
- புளி – சிறிதளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- மிளகு – சிறிதளவு
- சீரகம் – சிறிதளவு
- சோம்பு – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
- நல்லெண்ணெய் – 50 மில்லி கிராம்
- கறிவேப்பிலை
செய்முறை
முடக்கத்தான் கொடியை (அதிக மருத்துவ பயனுடையது ) மட்டும் எடுத்து அதை அரைத்துக்கொள்ளவும். பிறகு மிளகு , சீரகம், சோம்பு, பூண்டு இவற்றை ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். பிறகு நல்லெண்ணைய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் , மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள முடக்கத்தான், மிளகு , சீரகம், சோம்பு, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும், புளி கரைசல் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
பயன்கள்
- மூட்டு வலி, பக்கவாதம் உள்ளவர்களுக்கு மிக சிறந்த உணவு. வாரம் ஒரு முறை இதை உணவாகவும் மருந்தாகவும் பயன் படுத்த வேண்டும்.
- பித்தம், தலை சுற்றல் , உடல் வலிக்கு சிறந்த உணவு.
- மூலம், நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.