உணவே மருந்து
முருங்கை கீரை ரசம்
தேவையான பொருள்கள்
- முருங்கை கீரை
- தக்காளி – 1
- வெங்காயம் – 1
- பூண்டு – 7
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- மிளகு – 5 கிராம்
- சீரகம் – சிறிதளவு
- சோம்பு – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
- நல்லெண்ணெய் – 50 மில்லி கிராம்
- தேங்காய் – சிறிதளவு
- கடுகு – சிறிதளவு
- மல்லித்தூள் – சிறிதளவு
- மிளகாய் தூள் – சிறிதளவு
முருங்கை கீரை ரசம் செய்முறை
மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு இவற்றை ஒன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காயை தனியாக அரைத்துக்கொள்ளவும் பிறகு நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், மஞ்சள் தூள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்திருந்த மிளகு , சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து அதனுடன் தேங்காய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து பிறகு முருங்கை கீரை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
முருங்கை கீரை ரசம் பயன்கள்
- பித்த மயக்கம், கண் நோய், செரியா மந்தம் தீரும்.
- கண் எரிச்சல், வாய்நீர் ஊறுதல், வாய் கசப்பு மாறும்.
- மார்புசளி, கபம் தீரும்.
- மலச்சிக்கலை போக்கும்.
- ஆண்மை பெருகும், இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.