நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காயம்
வெங்காயம் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நல்ல முறையில் ஊக்குவிக்கிறது. இதனால் நமது உடலில் நோய் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். வெங்காயத்தை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய வலிமை கிடைக்கிறது.
வெங்காயம் நாம் அன்றாடம் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவாகும். நிறையப் பேர் வெங்காயத்தை உணவில் சேர்த்து சமைத்தாலும் சாப்பிடும் போது ஒதுக்கிவிடுவார்கள். இது தவறு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவு வெங்காயம் தான்….
பித்தம் குறையும்
நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
தலைவலி குறையும்
வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்க வெகுவாக உதவுகிறது என்று கூறப்படுகிறது.
வாய் சார்ந்த பிரச்சனைகள்
வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.
மேலும் சில பயன்கள்
- வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
- படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.
- திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.4. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
- வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
- பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
- வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
- வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
- வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.