உடலை உறுதிப்படுத்தும் அருகம்புல்
அருகம் புல்லின் ஆங்கிலப் பெயர் ‘ Cynodon Dactylon ‘ என்பதாகும். இதற்கு அருகு-பதம்-தூர்வை போன்ற பெயர்களும் உண்டு. குறுகலான நீண்ட இலைகளை கொண்டு நேராக வளரக் கூடியது.தமிழகத்தில் எல்லா இடங்களிலும் – வயல் வரப்புகளிலும் வளரக் கூடியாது.
இது சல்லிவேர் முடிச்சுகள் மூலமாக இன விருத்தி செய்கிறது. சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் விடும். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தில் தண்ணீர் பட்டால் உடனே செழித்து வளரும்.
அருகம்புல் பொ ங்கல் அன்று மாட்டுச் சாணத்தை எடுத்து பிள்ளையார் பிடித்து அதில் அருகம்புல்லை எட்டு வைத்து வணங்குவது வழக்கம்.இச்சாணம் எவ்வளவு காலமானாலும் வண்டுகள் – பூச்சி கள் புளுக்கள் உருவாவதில்லை.
அருகம்புல் இல்லாமல் பிள்ளையார் பிடித்து வைத்தால் மூன்று நாட்களிலேயே வண்டு துளைத்து விடும். இதிலிருந்தே இதன் மகிமையை – மருத்துவ குணத்தைக் கண்டு கொள்ளலாம். ஆனை முகக் கடவுளுக்கு பிடித்தது அருகம்புல் தான். அவருக்கு அருகம்புல்லில் தான் மாலை கட்டி அணிவிப்பார்கள்.
கிரகண நேரங்களில் குடிக்கும் தண்ணீரில் அருகம்புல்லை போட்டு வைக்கும் பழக்கம் உண்டு. இது மூட நம்பிக்கை அல்ல.கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கவே இப்படி செய்வது உண்டு.
அந்த காலத்தில் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும் போது அருகம் புல்லை வைத்தே மந்திரம் சொல்வார்கள்.புல் வகைகளில் அருகு எப்படி சிறந்து விளங்குகிறதோ அதேபோல் மன்னர்க ள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்வது வழக்கம்.
இரத்த மூலம் தீர
அருகம் புல்லை அரைத்து இரத்தம் வடியும் காயங்களுக்கு கட்ட உடனே இரத்தம் வடிவது நிற்கும். புல்லை அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டால் இரத்த மூலம் தீரும்.
உடல் குளிர்ச்சி பெற
காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சூப் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் போய் – உடலும் குளிர்ச்சி அடையும். நரையும் – திரையும் மாறும். நரம்புகள் இறுகும்.
தோல் நோய்கள் குணமாக
சிறிதளவு மஞ்சள் தூளுடன் அருகம்புல் சேர்த்து அரைத்து உடலில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க சொறி,சிரங்கு,தேமல்,வேர்க்குரு,தோல் நோய்,சேற்றுப் புண்,வேனல் கட்டி முதலியவை குணமாகும்.
மாதவிலக்கு சிக்கல் தீர
மாதுளை இலை சிறிதளவு – அருகம்புல் சிறிதளவு சேர்த்து அரைத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து காய்சி. 1 மணிக்கு ஒரு முறை குடித்து வந்தால் மூக்கு – காது – ஆசவாய் ஆகிய வற்றில் வரும் ரத்தம் நிற்கும். வெப்பம் குறையும். மாத விலக்கு சிக்கலும் தீரும்.
முக வசீகரம் உண்டாக
அருகம்புல் சமூலம் நன்றாக அரைத்து வெண்ணெய் கலந்து ஒரு மண்டலம் ( 48 நாட்கள் ) சாப்பிட்டு வந்தால் உடல் தளர்ச்சி நீங்கி – உடல் உறுதிப்படும். முக வசீகரம் உண்டாகும். அறிவு வளரும்.
விஷயங்களை போக்கும்
அருகம்புல் – நெல்லிக்காய் அளவு அரைத்து பசும்பாலில் கலக்கி வடிகட்டி கொடுத்தால் சகல விஷங்களும் தீரும்.
தேகம் பலமடைய
நரம்பு கூடுகள் வலுப் பெறும். தேகபலமுண்டாகும். நீர்கருப்பு வெட்டை சூடு – மூலச்சூடு குறையும்.
அருகம்புல் தைலம்
சிறு துண்டுகளாக நறுக்கிய அருகம் வேரை படி தண்ணீரில் கலந்து எரித்து 1/4 படி அளவாக சுண்டக் காய்ச்சி – பிறகு 1/2 லிட்டர் நல்லெண்ணெய் விட்டு எரிக்கும் போது கோரைக் கிழறுகு ( 10 கிராம் ) பூமிச்சர்க்கரைக் கிழங்கு ( 10 கிராம் ) அமுக்ரா கிழங்கு (10 கிராம் ) மூன்றையும் பசும்பால் விட்டு அரைத்து மேற்படி எண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு – வாரம் ஒரு முறை தலை மற்றும் உடல் முழுதும் தேய்த்து – சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கபாலச் சூடு – மேக காங்கை – பித்தும் – மூலச்சூடு – வாதம் – இரந்தி – நெஞ்சு எறிவு – வயிற்று எறிவு – நீர் கருப்பு முதலியவை குணமாகும். உடல் குளிர்ச்சி பெறும்.நன்றாக தூக்கம் வரும்.