கணையத்தை சிறப்பாக செயல்பட வைக்கும் வாழைப்பூ
வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டது . வாழைப்பூ தசைகளை உறுதியாக்கும் தன்மை கொண்டது. இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது. ஆயுளை நீட்டிக்கும் வாழைப்பூவை வாரம் இருமுறையாவது அனைவரும் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவாகும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இராதைப்போக்கை நீக்கும் தன்மை கொண்டது.
அகத்தியரின் பாடலில் வாழைப்பூவின் சிறப்பை பற்றி இவ்வாறு கூறுகிறார்
`வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
கோழைவயிற்றுக்கடுப்பு கொல்காசம்-அழியனல்
என்னஏரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை’
கணையம் சிறப்பாக செயல்பட
இன்று பெரும்பாலானவர்களை பாடாய்படுத்தும் நோய்களில் ஒன்று நீரிழிவு (சர்க்கரை நோய்). இந்நோயை கட்டுக்குள் வைக்க வாழைப்பூவை வாரம் இரு முறை சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட்டு வர கணையம் சிறப்பாக செயல்பட்டு உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க செய்து சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க செய்யும்.
இரத்த மூலம் குணமாகும்
வாழைப்பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்துண்ண உடல் சூடு, சீத பேதி, இரத்தமூலம் குணமாகும்.
அஜீரணக் கோளாறு
தவறான உணவு பழக்க வழக்கங்களால் பலருக்கும் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி உண்டாகும். இதனை குணமாக்க வாழைப்பூவை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதித்ததும் வடிகட்டி குடித்தால் வயிற்று கோளாறு உடனே குணமாகும்.
பெண்களுக்கு
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறு மற்றும் கர்ப்பப்பை பிரச்சினை உள்ளவர்கள் வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர குணமாகும். வாழைப்பூவை மிளகு சேர்த்து ரசமாக வைத்து சாப்பிட பெண்களுக்கு ஏற்படம் வெள்ளைப்படுதல் குணமாகும்.
வயிற்றுவலி நீங்க
வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தயிர் கலந்து சாப்பிட மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி, அதிக இரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.
ஆண்மைக்கு வாழைப்பூ சூப்
வாரம் இருமுறை வாழைப்பூ சூப் சாப்பிட ஆண்மைக்கோளாறு நீங்கும்.
கருப்பை பலம் பெற
- வாழைப்பூ – 25 கிராம்
- மாம்பூ – 25 கிராம்
- தென்னம்பூ – 25 கிராம்
- மாதுளம்பூ – 25 கிராம்
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- மிளகு – 10 கிராம்
இவற்றை இடித்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு 1/2 லிட்டராக வரும் வரை காய்ச்சி இறக்கி 100 மிலி அளவு காலை மாலை சாப்பிட்டு வர கருப்பை பலம் பெறும். மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குணமாகும்.