கோரைக்கிழங்கு பயன்கள்
கோரைக்கிழங்கு ஆண்களின் தாது விருத்திக்கும், உடலுக்கு பொலிவையும் தரக்கூடியது மேலும் காய்ச்சல், பித்தம், வாதம் ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாகும். இதனை முத்தக்காசு என்றும் அழைப்பதுண்டு. குளிர்ச்சி மற்றும் நல்ல நறுமணத்தை தரக்கூடியது.
கோரைக்கிழங்கு தட்டையான இலைகளையுடைய புல் செடி. முட்டை வடிவ கிழங்குகளை கொண்டது. இது தமிழகமெங்கும் தானே வளர்கிறது.
இதன் இலைகள் தட்டையாகவும், முட்டை வடிவ கிழங்குகளை கொண்ட புல் செடியினம். தமிழகமெங்கும் வளரக்கூடியது.
தாது விருத்தி, உடல் பொலிவு பெற
கோரைக்கிழங்கின் மேல் தோல்களை நீக்கி சுத்தம் செய்து பொடியாக்கி தினமும் காலை, மாலை என ஒருகிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர ஆண்களுக்கு தாது விருத்தியாகும் , உடல் பொலிவு பெறும் ஞாபகசக்தி, புத்திகூர்மை உண்டாகும்.
காய்ச்சல் தீர
கோரைக்கிழங்கு, நிலவேம்பு, கண்டங்கத்திரி வேர், கசகசா, சீந்தில் கொடி, சுக்கு, புளியாரைக்கீரை, சந்தனத்தூள் ஒவ்வொன்றிலும் 15 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 5ல் ஒரு பங்கு அளவு காய்ந்ததும் இறக்கி அதில் திப்பிலி பொடி சிறிது சேர்த்து தினமும் 3 வேளை மூன்று நாட்களுக்கு கொடுக்க காய்ச்சல் நீங்கும்.
முகச்சுருக்கம் நீங்க, தோல் நோய்கள் குணமாக
கோரை கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் தூள், சந்தனத்தூள் ஆகிவற்றுடன் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வர முகச்சுருக்கம் நீங்கும். இயற்கை குளியல் பொடியில் கோரை கிழங்கு சேர்க்கப்படுகிறது இதனால் தோல்நோய்கள் நீங்கும்.
பசியின்மை, செரியாமை நீங்க
கோரைக்கிழங்கை இடித்து பொடியாக்கி மோரில் கலந்து சாப்பிட்டால் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் பசியின்மை மற்றும் செரியாமை நீங்கும்.
தாய்ப்பால் சுரக்க
பச்சையான கோரைக்கிழங்கை எடுத்து அரைத்து மார்பின் மீது பற்று போட தாய்ப்பால் சுரக்கும். தேனீக்கள் மற்றும் தேள்கடிக்கு பற்றுப்போட குணமாகும்.
இரத்தம் சுத்தமாக
கோரைக்கிழங்கு பொடியை தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் நுண் கிருமிகளை வெளியேற்றுகிறது. இரத்தத்தை சுத்தமாக்குகிறது.