கிராம்பு மருத்துவ பயன்கள்
கிராம்பு சமையல் நறுமணத்திற்காகவும், சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாசனை பொருட்கள் தயாரிக்கவும், பற்பசை போன்றவை தயாரிக்கவும் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஈறு வீக்கம், பல் வலி, வாய்துர்நாற்றம் போன்றவற்றிக்கு சிறந்த நிவாரணியாக கிராம்பு திகழ்கிறது.
கிராம்பில் பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் கே, சோடியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் ஃபைபர் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
பல் பிரச்சனைகளுக்கு
கிராம்பை பொடியாக்கி பற்பொடியுடன் சிறிதளவு சேர்த்து பல் துலக்கி வர பல்வலி, ஈறுவீக்கம், வாய்நாற்றம் ஆகியவை குணமாகும். பற்பசை தயாரிப்பில் கிராம்பு அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சீரண சக்தியை அதிகரிக்க
செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைப்பதால் மலச்சிக்கல் மற்றும் அசீரண கோளாறுகளை தடுக்கிறது. இது சீரண சக்தியை அதிகரிப்பதால் அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது இரத்தத்தை சுத்திகரித்து அதில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்குகிறது.
அக உறுப்புகள் பலம் பெற
கிராம்பு பொடியை 1/2 கிராம் அளவு தினமும் காலை, மாலை என இருவேளை தேனில் குழைத்து சாப்பிட்டு வர அக உறுப்புகள் பலம் பெறும்.
கல்லீரல் சீராக இயங்க
உடலில் ஏற்படும் நச்சுத்தன்மையை கல்லீரல் தான் நீக்குகிறது. கிராம்பில் உள்ள யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி சீராக இயங்க உதவுகிறது.
தலைவலிக்கு சிறந்த நிவாரணி
தலைவலிக்கு கிராம்பு தூள் சிறிதளவு பாலில் கலந்து குடிக்க தலைவலி தீரும் அல்லது தாய்ப்பாலுடன் கிராம்பு தூளை குழைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி குறையும்.
வாய் கிருமிகள் நீங்க
வாய் துர்நாற்றம் அகல தினமும் காலையில் 2 கிராம்புகளை வாயில் சிறிது நேரம் வைத்திருந்தால் அது உமிழ் நீருடன் கலந்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றிவிடும். மேலும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.
உதிர்ச்சிக்கல் தீர
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உத்திரசிக்கல் தீர கிராம்பை பொடியாக்கி 2 கிராம் அளவு எடுத்து பனை வெல்லத்தில் கலந்து சாப்பிட்டு வர உதிர்ச்சிக்கல் தீரும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.
வாய்ப்புண் குணமாக
இரண்டு கிராம் அளவு கிராம்புப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.