வசம்பு மருத்துவ பயன்கள்
வசம்பு மிகவும் முக்கியான மூலிகைகளில் ஒன்றாகும். இது காரத்தன்மை உடையது. இதனை பேர் சொல்லா மூலிகை, பிள்ளை வளர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு வேண்டிய முக்கியமான மூலிகையாகும்.
குழந்தைகளுக்கான மூலிகை வசம்பு
- வசம்புவை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நூலில் கோர்த்து குழந்தைகளின் கைகளில் போட்டு விடுவார்கள் ஏனென்றால் குழந்தைகள் அதை நுகரும்போது வசம்பில் உள்ள மருத்துவ குணங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- வசம்புவை நெருப்பிலிட்டு கரியாக்கி 1/4 கிராம் அளவு எடுத்து தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்று வலி, பேதி ஆகியவை நீங்கும்.
- குழந்தைகள் உடல் வலியினால் அழுதுகொண்டே இருப்பார்கள் அதற்க்கு வசம்பை தண்ணீரில் போட்டு காய்ச்சி குழந்தைகளை குளிப்பாட்ட வலி நீங்கும்.
பேச்சு வருவதில் சிக்கல் இருந்தால்
சிலருக்கு பேசுவதில் சிரமம் இருக்கும் உச்சரிப்பு சரியாக வராமல் உளறுவார்கள் அவர்கள் வசம்பு பொடியை ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் குழைத்து நாக்கில் தடவி வர பேச்சு ஆற்றல் மேம்படும்.
நோய்களை வராமல் தடுக்கும்
சில நேரங்களில் சீசன் போன்று காய்ச்சல், பேதி போன்ற நோய்கள் பரவும் அந்நேரத்தில் வசம்பு சிறிது நேரம் வாயில் வைத்து இருக்க நோய்களை வராமல் தடுக்கும்.
நரம்பு தளர்ச்சி
வசம்புவை நன்றாக காயவைத்து இடித்து பொடியாக்கி அதனுடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
விஷம் நீக்கும்
பூரான், தேள், விஷப்பூச்சி போன்றவை கடித்து விட்டால் வசம்பு பொடியை 2, 3 ஸ்பூன் கொடுக்க விஷம் இறங்கும். இதனால் வசம்பு அனைவரின் வீட்டிலும் இருக்க கூடிய மூலிகையாகும்.
பொடுகு தொல்லை தீர
சிலருக்கு பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும் அவர்கள் வசம்பை நசுக்கி வேப்பிலை சிறிதளவு சேர்த்து தேங்காய் எண்ணையில் போட்டு கொதிக்க வைத்து ஆறியவுடன் அந்த எண்ணையை தலைக்கு தடவி வர பொடுகு தொல்லை தீரும்.
வீக்கங்கள், கட்டிகள் குணமாக
வசம்புடன் சிறிதளவு சுக்கு சேர்த்து இடித்து பொடியாக்கி சிறிது தண்ணீர் விட்டு குழைத்து வீக்கங்களுக்கு பற்றுப்போட விரைவில் குணமாகும்.
வயிற்றுவலி தீர
வாசம்பை தீயிட்டு கரியாக்கி விளக்கெண்ணெயில் குழைத்து அடிவயிற்றில் பூசி வர வயிற்றுவலி குணமாகும்.