மூலிகைகள்

நிலவேம்பு பயன்கள்

நிலவேம்பு செடியினத்தை சேர்ந்தது. அதிக கசப்பு தன்மை கொண்டது. கிராமங்களில் சிறியாநங்கை என்று அழைப்பார்கள். மேலும் பெரியாநங்கை, கொடிக்குருத்து, மிளகாய் நங்கை போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. செடி முழுவதும் மருத்துவ பயனுடையது.

மயக்கம், நீர்க்கோவை போன்றவை குணமாக்கும். இது நீரிழிவு நோய்க்கும் நல்ல பலனை தருகிறது, வைரஸால் ஏற்படும் சீரணக்கோளாறு மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது. பசியின்மையை போக்கும்.

தொடர் காய்ச்சலுக்கு

தொடர் காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு இலையை நன்றாக அரைத்து சுண்டக்காய் அளவு காலை, மாலை என இருவேளை சாப்பிட்டுவர காய்ச்சல் குணமாகும்.

கல்லீரல் நோய்கள் குணமாக

நிலவேம்பை அரைத்து சிறிது தண்ணீர் கலந்து வடிகட்டி 25மிலி வீதம் காலை, மாலை இருவேளை 3 நாட்களுக்கு குடித்த்து வர கல்லீரல் சம்பந்தமான நோய்கள் தீரும்.

வயிற்றுப்புழுக்கள் வெளியேற

5 கிராம் அளவு நிலவேம்பு பொடி, 2 கிராம் சீரகப்பொடி சேர்த்து தண்ணீரில் கலந்து இரவில் 3 நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

தோல் நோய்கள் தீர

செடி முழுவதையும் காயவைத்து அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு குளிக்கும்போது தண்ணீரில் குழைத்து உடலில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வர சொறி, சிரங்கு உட்பட தோல்நோய்கள் தீரும்.

நோய் எதிர்ப்பு சக்தி

சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் நிலவேம்பு மூலிகை அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டைபாய்டு காய்ச்சலுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பசியை தூண்டும்

வாயுக்கள் வயிற்றில் மந்த தன்மையை உருவாக்கி பசியின்மையை உருவாக்கி விடுகின்றன. இதுபோன்ற வயிறு மந்த நிலையில் இருப்பவர்கள் நிலவேம்பை நன்றாக உலர்த்தி பொடி செய்து 5 கிராம் வீதம் தண்ணீரில் கலந்து காலையில் ஒரு வேளை மட்டும் குடித்து வர பசி உண்டாகும்.

அடிக்கடி மயக்கம் போன்று ஏற்படுதல்

சிலருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுவது போல் மந்த நிலையாக இருக்கும் அவர்கள் அடிக்கடி நிலவேம்பு கஷாயம் குடித்து வருவது நல்லது.

பித்தம் நீங்க

பித்த நீர் அதிகமானால் உடலில் பல வித நோய்களை உண்டாக்குகிறது. நில வேம்பு கசாயம் குடிப்பதனால் பித்தம் குறையும்.

தலைவலி நீங்கும்

தலையில் நீர்கட்டு இருந்தால் அடிக்கடி தலைவலி தோன்றும். அவர்களுக்கு நிலவேம்பு கசாயம் குடித்து வர தலைவலி நீங்கும். இருமல், தும்மல் போன்றவை நீங்கும்.

தைராய்டு பிரச்சினைகளுக்கு

தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு நிலவேம்பை பொடி செய்து கசாயமாக செய்து குடித்து வர தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு எற்படும் கர்ப்பபை பிரச்சினைகள் நீங்கும்.

நிலவேம்பு கசாயம்

கசாயம் 9 வகையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இக்கசாயம் டெங்கு உள்ளிட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படும் காய்ச்சலை குணமாக்குகிறது. கடந்த காலங்களில் வைரஸ் காய்ச்சலுக்கு எதிராக சிறப்பாக செயல் பட்டது நிரூபிக்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் செய்முறை

குறிப்பு : சிறுவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கொடுக்க கூடாது. கர்பிணி பெண்களும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சாப்பிடுவது  நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =

error: Content is protected !!