மூலிகைகள்

வேப்பிலை பயன்கள்

வேப்பிலை மகத்துவத்தை சித்தர்கள் தங்களுடைய கற்ப முறையில் வெகுவாக குறிப்பிட்டுள்ளனர்.

மனித தேகத்தை பல நூறு வருடங்கள் நீட்டிக்கலாம் காயகற்ப முறையினால். இத்தனை சிறப்பு வாய்ந்த காயகற்ப மூலிகைகளில் வேப்பிலையும் ஒன்று.

வேப்பிலை காயகற்பம்

முதல் நாள் ஒரு வேப்பிலை என்று ஆரம்பித்து அடுத்தநாள் இரண்டு என்று ஒவ்வொன்றாக கூட்டி 21 இலைகள் வரை சாப்பிட்டு வர தேகம் பலம் பெறும். பிணிகள் நெருங்காது.

தலை வலி தீர வேப்பிலை வேது பிடித்தல்

வேப்பிலை, நொச்சி இலை, நாயுருவி இலை, நுணா இலை ஒவ்வொன்றிலும் இரண்டு கைப்பிடி அளவு எடுத்து அத்துடன் மஞ்சள் 10 கிராம் அளவு போட்டு 5 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து.

அதில் சுட்ட செங்கலை போட்டு கம்பளியால் உடலை மூடி பாத்திரத்தை திறந்து அதில் வரும் ஆவியை நுகர்ந்தால் தலை வலி, தும்மல், உடல் வலி, கழுத்து வலி ஆகியவை நீங்கும்.

பித்தம் தணிய

வேப்பிலை இளந்தளிர், புளியந்தளிர், எலுமிச்சை தளிர், விளா இலை தளிர், கிச்சிலி இலை தளிர் இவற்றை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு எடுத்து தண்ணிரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க பித்த நோய்கள் கண் காசம் ஆகியவை தீரும்.

தலைமுடி பிரச்சனைகளுக்கு

தலையில் அரிப்பு அல்லது நோய் தொற்றுகள் இருந்தால் வேப்பிலையை அரைத்து நன்றாக ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து வெது வெதுப்பான நீரில் அலசி வந்தால் தலையில் அரிப்பு, பொடுகு, நோய் தொற்றுகள் ஆகியவை தீரும்.

பித்த வெடிப்பு, கட்டி, பருக்கள் மறைய

வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வர பித்த வெடிப்பு, கட்டி, பருக்கள், கொப்பளங்கள் ஆகியவை குணமாகும்.

வயிற்றில் உள்ள கிருமிகள் அழிய

வேப்பிலையுடன் சிறிது மிளகு, உப்பு சேர்த்து அரைத்து சுண்டக்காய் அளவு காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள கிருமிகள் அழியும்.

வாய் துர்நாற்றம் அகல

வேப்பிலை கொழுந்தை அரைத்து தண்ணீரில் கலந்து வாய் கொப்பிளித்து வர பல் ஈறு பிரச்சினைகள் நீங்கும். பல் சொத்தை ஏற்படாமல் தடுக்கும். வாயில் உள்ள கிருமிகளை அளித்து வாய் துர்நாற்றத்தை போக்கும்.

சரும நோய்கள்

வேப்பிலையை அரைத்து வாரம் ஒரு முறை உடலில் தேய்த்து குளித்து வர சரும நோய்கள் தீரும். அரிப்பு, படை போன்ற நோய்கள் வராமலும் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =

error: Content is protected !!