மூலிகைகள்

சிறுநீரகத்தை பலப்படுத்தும் நாயுருவி

நாயுருவி அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய அற்புதமான மூலிகையாகும். நீண்ட கதிர்போன்று வளரக்கூடிய ஒரு சிறுசெடியினம் ஆகும். இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணமுடையது.
அதிகமான மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது குறிப்பாக மூலம், புழுவெட்டு, நரம்பு வீக்கம், எலிக்கடி, பல் வலி, கூச்சல், இருமல், பால்வினை நோய்கள் என பல நோய்களை குணமாக்க கூடியது.

சிறுநீரகத்தை பலப்படுத்த

சீறுநீரகத்தில் வரும் கட்டிகள் மற்றும் கற்கள் முதலியவற்றை குணமாக்கும் அற்புத மூலிகை நாயுருவி. இதன் இலைகளை எடுத்து சாறுபிழிந்து வடிகட்டி 30 மிலி அளவு தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் அனைத்தும் தீரும்.

நரம்பு பிரச்சனைகள் தீர

நாயுருவி இலை மற்றும் வேர் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் சுக்கு 5 கிராம், ஓமம் 5 கிராம், பூண்டு பல் 5 இவற்றை அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நான்றாக காய்ச்சி 300 மிலியாக வந்தவுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து இறக்கி வடிகட்டி தினமும் 3 வேளை 100மிலி வீதம் குடித்து வர நரம்பு வீக்கம், நரம்பு வலி, நரம்பு புடைப்பு, இரத்தக்கட்டு ஆகியவை தீரும்.

தேள்கடி, எலி கடி, நாய்க்கடி விஷங்கள் முறிய

இலைகளை பறித்து நன்றாக சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் மிளகு 5 கிராம், ஓமம் 10 சிட்டிகை, ஒரு வெற்றிலை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு ஒரு வாரத்திற்கு சாப்பிட தேள்கடி, பூனை கடி விஷங்கள் நீங்கும்.

இதை இரண்டு வாரங்களுக்கு சாப்பிட்டு வர நாய்க்கடி விஷங்கள், பூரான் கடி விஷம் நீங்கும், பூரான் கடிப்பதால் ஏற்படும் தடிப்பு நீங்கும்.

தேமல் மறைய

நாயுருவி இலை மை போல் அரைத்து தேமல், படர்தாமரை ஆகியவற்றிக்கு தடவி வர குணமாகும்.

இரத்த மூலம் குணமாக

நாயுருவி இலையை 10 கிராம் அளவு எடுத்து மென்மையாக அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து தினமும் இருவேளை காலை, மாலை என 10 நாட்களுக்கு சாப்பிட்டு வர இரத்த மூலம் தீரும்.

காது வலி, காது அடைப்பு குணமாக

நாயுருவி இலையுடன் சிறிது பூண்டு சேர்த்து அரைத்து நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி ஆறியவுடன் ஓரிரு துளிகள் காதில் விட காது வலி, காது அடைப்பு குணமாகும்.

புழுவெட்டு நீங்கி முடி வளர

புழுவெட்டினால் தலையில் ஏற்படும் முடி கொட்டி சொட்டையாக ஏற்படும். இதற்கு நாயுருவி இலையை கசக்கி சாறுபிழிந்து சொட்டையாக உள்ள இடத்தில் பூசிவர முடி முளைக்க ஆரம்பிக்கும்.

மூல நோய்க்கு

  • நாயுருவி இலை – ஒரு கைப்பிடி
  • தொட்டாற்சுருங்கி – ஒரு கைப்பிடி
  • மிளகு – 15
  • சீரகம் – 5 கிராம்
  • மஞ்சள் தூள் – சிறிதளவு

இவற்றை ஒன்றாக அரைத்து தினமும் இருவேளை தொடர்ந்து 60 முதல் 120 நாட்களுக்கு சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.

வெள்ளைப்படுதல் குணமாக

நாயுருவி இலையை சாறு பிழிந்து 50மிலி அளவு எடுத்து அதில் இரண்டு கிராம் கடுக்காய் தூளை சேர்த்து பருகி வர வெள்ளைப்படுத்தலுக்கு உடனடி நிவாரணம் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 17 =

error: Content is protected !!