பற்பாடகம் பயன்கள்
பற்பாடகம் மென்மையான பல கிளைகளை உடைய சிறு செடியினம். தண்ணீரில் நனைத்து கசக்கினால் வழுவழுப்பாக சாறு வரும். இதன் முக்கிய குணம் உடல் வெப்பத்தை தணிக்கும், காய்ச்சலை குணமாகும். இதன் செடி முழுவதுமே மருத்துவ குணமுடையது.
உடல் நாற்றம் நீங்க
பற்பாடகத்தை பால் விட்டு அரைத்து உடலில் பூசி குளித்து வர உடல் நாற்றம் நீங்கும், உடல் சூடு குறையும், கண்கள் பிரகாசிக்கும்.
ஆஸ்துமா குணமாக
பற்பாடகம் மூலிகை செடியை முழுவதுமாக காயவைத்து இடித்து பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுத்தல் குணமாகும். கண்களுக்கு குளிர்ச்சியை தரும்.
காய்ச்சல் குணமாக
- பற்பாடகம் – 10 கிராம்
- கோரைக்கிழங்கு – 10 கிராம்
- அதிமதுரம் – 10 கிராம்
- பேய்புடல் – 10 கிராம்
- சீந்தில் கொடி – 10 கிராம்
- சீந்தில் வேர் – 10 கிராம்
- கொடுப்பை வேர் – 10 கிராம்
இவற்றை அனைத்தையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு 30 மிலி அளவு எடுத்து அதில் சிறிது தேன் கலந்து மூன்று நாட்களுக்கு தினமும் மூன்று வேளை கொடுக்க விட்டு விட்டு வரும் காய்ச்சல் குணமாகும்.
பேதி குணமாக
- பற்பாடகம் – 5 கிராம்
- வெட்டி வேர் – 5 கிராம்
- சுக்கு – 5 கிராம்
- மல்லி – 5 கிராம்
- மாம்பட்டை – 5 கிராம்
- கோரைக்கிழங்கு – 5 கிராம்
- இலவம்பிசின் – 5 கிராம்
- கஞ்சாங்கோரை – 5 கிராம்
இவற்றை அனைத்தையும் இடித்து ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்றாக சுண்டக்காய்ச்சி 1/4 லிட்டர் ஆக வந்த உடன் இறக்கி ஆறிய பிறகு வடிகட்டி ஒரு டம்ளர் அளவு தினமும் 4 வேளை குடித்து வர பேதி, காய்ச்சல் குணமாகும்.
வாத சுரம் குணமாக
- பற்பாடகம் – 5 கிராம்
- ஆடாதோடை – 5 கிராம்
- தூதுவளை – 5 கிராம்
- சுக்கு – 5 கிராம்
- திப்பிலி – 5 கிராம்
- சித்தரத்தை – 5 கிராம்
- மிளகு – 5 கிராம்
இவற்றை அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 200 மிலி யாக காய்ச்சி தினமும் 4 வேளை 50 மிலி வீதம் குடித்து வர வாத சுரம், சளி, இருமல், இளைப்பு, காசம் இவைகள் குணமாகும்.