மூலிகைகள்

பூவரசு மருத்துவ பயன்கள்

பூவரசு இதய வடிவிலான இலைகளையும் மஞ்சள் நிறப்பூக்களையும் உடையது. தமிழகமெங்கும் வளரக்கூடியது. இதன் பூவரசம் பூ, இலை, பூவரசம்பட்டை இவை அனைத்தும் மருத்துவ பயனுடையது. பிணிகளை நீக்கி உடலை தேற்றவும், உடலில் வெப்பத்தை தணிக்கவும் பயன்படுகிறது.

பூவரசு இலை

இலைகளை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டி வர வீக்கம் குறையும். இதன் பழுப்பு உலர்த்தி எரித்து அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களுக்கு போட குணமாகும்.

பூவரசம் பூ

பூவரசம்பூவை அரைத்து சொறி, சிரங்கு இருக்கும் இடத்தில் பூசி வர விரைவில் குணமடையும்.

பூவரசம் பட்டை

பூவரசம் பட்டை 200 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி தினம் இருவேளை குடித்து வர வயிறு வீக்கம், விஷ பூச்சிக்கடி ஆகியவை குணமாகும்.

படர்தாமரை குணமாக

பூவரசு காயை அரைத்து அதன் சாற்றை படர்தாமரைக்கு தடவி வர குணமாகும்.

தோல் வியாதிகள் குணமாக

நல்ல முற்றிய மரத்தின் பூ, காய், பட்டை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர தோல் வியாதிகள் அனைத்தும் குணமாகும். இதை தொடர்ந்து 90 நாட்களுக்கு சாப்பிட்டு வரவும்.

மூட்டு வீக்கம் குணமாக

மூட்டுப்பகுதிகளில் நீர் கோர்த்து கடுமையான வலியால் அவதிப்படுபவர்கள் பூவரசம் பூ, காய், பட்டை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணையில் சேர்த்து காய்ச்சி பூசிவர மூட்டு வீக்கம் குணமடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + fourteen =

error: Content is protected !!