மூலிகைகள்

மஞ்சள் மருத்துவ பயன்கள்

மஞ்சள் பழங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் நறுமண பொருளாகும். மஞ்சளின் இலை அகன்ற ஈட்டி வடிவ இலைகளை கொண்ட சிறு செடியினம். இதன் கிழங்குகள் மருத்துவ பயனுடையது.

அழகு, சமையல், மருத்துவம், ஆன்மிகம் என அனைத்திலும் இதன் பயன்பாடு உள்ளது. மஞ்சளில் கர்க்குமின் (Curcumin ) என்ற வேதிப்பொருள் உள்ளது.

மஞ்சள் வகைகள்

கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள், குண்டு மஞ்சள், விரல் மஞ்சள், நாக மஞ்சள், குரங்கு மஞ்சள், பலா மஞ்சள், காட்டு மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என பல வகை உண்டு.

சிறந்த கிருமி நாசினி

மஞ்சள் சிறந்த இயற்கை கிருமி நாசினி. இதனால் தான் வீட்டை சுற்றி மஞ்சள் கலந்த நீரை தெளிப்பார்கள். ஆனால் ஆன்மிகத்தில் பல காரணங்கள் சொன்னாலும். இந்நீரை தெளிப்பதால் பாக்ட்டீரியா, பூஞ்சை தொற்றுக்கள் பரவாமல் இருக்கும்.

சளி, மூக்கடைப்பு

சூடான பாலில் மஞ்சள்தூளை சிறிது சேர்த்து தினசரி இரவில் சாப்பிட கோழைக்கட்டு குணமாகும். மஞ்சளை நெருப்பில் போட்டு அந்த ஆவியை நுகர சளி, மூக்கடைப்பு, தலைவலி குணமாகும்.

சிறுநீரக நோய்கள் தீர

நெருஞ்சில் இலை சாறு 1/2 லிட்டர், கீழாநெல்லி சாறு 1/2 லிட்டர் இரண்டையும் 1/4 கிலோ மஞ்சளை ஊறவைத்து எடுத்து காயவைத்து பிறகு சிறுபீளை வேர், சீந்தில் இலை, தென்னம்பாளை அரிசி, வில்வ இலை ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஊறவைத்த மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு 1/4 ஸ்பூன் வீதம் தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வர சீறுநீரக கோளாறுகள் நீங்கும்.

காசநோய் குணமாக

மஞ்சள், அதிமதுரம் இரண்டிலும் 1/4 கிலோ அளவு எடுத்த வெற்றிலை சாற்றில் ஊறவைத்து பிறகு வெயிலில் உலர்த்தி இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். தினமும் 1/4 ஸ்பூன் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர காசநோய் குணமாகும்.

புற்று நோய் கட்டுப்பட

முதலில் மஞ்சளை வெற்றிலை சாற்றில் ஊறவைத்து நன்றாக ஊறியதும் வெயிலில் உலர்த்தி பிறகு கீழாநெல்லி சாற்றில் ஊறவைத்து மறுபடியும் வெயில் உலர்த்தி பிறகு கடுக்காய்த்தோல், நெல்லிக்காய் வற்றல், தான்றிக்காய் தோல் இவற்றை சேர்த்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் 5 கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வர புற்றுநோயை கட்டுப்படுத்தும்.

பிரசவமான பெண்களுக்கு

பிரசவத்திற்கு பிறகு மஞ்சளை சற்று அதிகமாக சேர்த்து கொண்டால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தளர்ச்சி குறைத்து வயிறு இறுக்கமாகும்.

கால் ஆணி மறைய

மஞ்சள், வசம்பு ஒரு துண்டு மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆணி காலில் பற்று போட்டு வர விரைவில் குணமடையும். தொடர்ந்து 3 வாரங்கள் போட்டு வரவேண்டும்.

தேனீ, குளவி விஷம் குறைய

தேனீக்கள் மற்றும் குளவி கொட்டினால் ஏற்படும் கடுமையான வலி நீங்க மஞ்சளுடன் வேப்பிலையை சேர்த்து அரைத்து பூச விஷம் முறிந்து வலி குறையும் .

கட்டிகள், புண்கள், கொப்புளங்கள் குணமாக

மஞ்சளோடு வேப்பிலையை சம அளவு எடுத்து அரைத்து மூன்று நாட்களுக்கு பற்று போடா சேற்றுப்புண், கொப்புளங்கள் மறையும். மஞ்சளோடு துத்தி இலையை அரைத்து கட்டிகளுக்கு பூசி வர மறையும் அல்லது பழுத்து உடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 10 =

error: Content is protected !!