கல்லடைப்பு, சிறுநீரக கோளாறுகளை குணமாக்கும் நெருஞ்சில்
நெருஞ்சில் மஞ்சள் நிற பூக்கள் உடைய, முள் உள்ள காய்கள் உள்ள சிறு செடியினம். தமிழகனமெங்கும் தானே வளரக்கூடியது. கிராமத்தில் இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் இதை பற்றி தெரியாமல் இருக்காது. இதன் செடி முழுவதுமே மருத்துவ பயனுடையது.
கண் எரிச்சல் குணமாக
நெருஞ்சில் செடி, அருகம்புல் இரண்டும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1/4 லிட்டராக காய்ச்சி 50 மிலி வீதம் தினமும் 3 வேளை 3 நாட்களுக்கு கொடுக்க கண் எரிச்சல், நீர்ச்சுருக்கு ஆகியவை தீரும்.
சிறுநீருடன் இரத்தம்
நெருஞ்சில் செடி முழுவதையும் அரைத்து சாறு எடுத்து ஒரு அவுன்ஸ் அளவு மோரில் கலந்து குடிக்க சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடையும்.
உடல் பலமடைய
நெருஞ்சில் விதை 10 கிராம், வெள்ளரி விதை 10 கிராம், நீர்முள்ளி விதை 25 கிராம் இவற்றை அனைத்தையும் ஒன்றாக இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 100மிலியாக காய்ச்சி வடிகட்டி அதில் பனகற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட உடல் பலமடையும்.
நீர்த்தாரை எரிச்சல், நீரடைப்பு குணமாக
நெருஞ்சில் செடியையும், கீழாநெல்லி செடியையும் சம அளவாக எடுத்து நன்றாக மை போல் அரைத்து சுண்டக்காய் அளவு தயிரில் கலந்து காலை, மாலை என ஒருவாரத்திற்கு சாப்பிட்டு வர நீர்த்தாரை எரிச்சல், நீரடைப்பு ஆகியவை தீரும்.
கல்லடைப்பு குணமாக
- நெருஞ்சில் விதையை பாலில் அவித்து பிறகு காயவைத்த பொடியாக்கி இளநீரில் கலந்து சாப்பிட்டு வர கல்லடைப்பு, நீறுநீர்கட்டு ஆகியவை குணமாகும்.
- நெருஞ்சில் வேர், சிறுபூளை வேர், சீரகம், சிறுகீரை வேர் ஒவ்வொன்றிலும் 40 கிராம் எடுத்து நன்றாக இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 1/4 லிட்டராக காய்ச்சி 100மிலி வீதம் காலை, மாலை குடித்து வர கல்லடைப்பு குணமாகும்.