அழகு

முகம் பொலிவு பெற இயற்கையான வழிமுறைகள்

முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசைதான் எல்லாருக்குமே இருக்கும். அதனால் நாம் சில இன்ஸ்டன்ட் அழுகு க்ரீம்களை வாங்கி படுத்துகின்றனர். அது முதலில் சில மாற்றங்களை தந்தாலும் நாளடைவில் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும். எனவே இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி முகத்தை அழகாக்குவது எப்படி என்று பார்ப்போம்.

முகம் பொலிவு பெற இயற்கையான வழிமுறைகள்

  • கசகசாவை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பசும்பாலில் இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து முகத்தில் தேய்த்து வர முகம் பொலிவு பெறும்.
  • முகம் பளபளப்பாக இருந்தாலும் முகத்தில் கண்களை சுற்றி கருவளையம் இருந்தால் அது அவலட்சணமாக தெரியும், இதை போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சள்பொடி கலந்து நன்றாக பேஸ்ட் போல் குழைத்து தினமும் குளிப்பதற்கு முன் கண்களை சுற்றி பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு குளித்து வர கருவளையம் மறையும்.
  • எலுமிச்சையை சாறு பிழிந்து அதில் பாசிப்பயறு மாவை கலந்து முகத்தில் பூசி 1 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவர முகம் நல்ல பளபளப்பாக மாறும்.
  • 2 தேக்கரண்டி அரசி மாவு, 2 தேக்கரண்டி தயிர் இரண்டையும் ஒன்றாக குழைத்து இரவில் முகத்தில் நன்றாக தேய்த்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவ விட வேண்டும்.
    இப்படி செய்வதால் பகலில் நாம் போடும் மேக்கப் சுத்தமாக நீக்கி விடும் தோலில் உள்ள துவரங்களும் சுத்தமாகும், முகம் இயல்பான நிலைக்கு வரும்.
  • ஆமணக்கு எண்ணையை புருவங்களில் தேய்த்தால் புருவமுடி கருப்பாக மாறும். இதனால் முகம் கூடுதல் அழகு பெறும்.
  • எலுமிச்சை சாறுடன் பால் ஆடையை எடுத்து குழைத்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவ வேண்டும் இப்படி சில நாட்களுக்கு தொடர்ந்து செய்தல் முகம் ஆப்பிள் போல் பளபளக்கும்.
  • முகம் பளபளப்பாக இருக்க குளிர்ந்த நீரில் சிறிதளவு பால் கலந்து காட்டன் துணிகளில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து முகத்தை கழுவி வரவேண்டும். தினமும் இதுபோன்று செய்து வர முகம் பளிச்சிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 14 =

error: Content is protected !!